- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் படத்தில் அவர்தான் வில்லனா? உடனடியாக மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், கடைசியில் வில்லனாக முடிவானது...

அஜித் படத்தில் அவர்தான் வில்லனா? உடனடியாக மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், கடைசியில் வில்லனாக முடிவானது இவர்தான் – குட் பேட் அக்லி லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆறு மாதங்களாக, விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனால் இடையிடையே ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் படப்பிடிப்பு சரிவர நடக்கவில்லை. முதலில் சில வாரங்கள் என தவிர்க்கப்பட்ட படப்பிடிப்பு, கடந்த இரண்டு மாதங்களாக பிரேக்கப் ஆகி உள்ளது.

படப்பிடிப்பே நடக்காத நிலையில் அஜித்குமார், சென்னையில் இருந்து வருகிறார். இப்போது நடிகர் அஜித்குமார், மே மாத இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்து விடுங்கள். அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க இருப்பதால், அதற்குள் இந்த படப்பிடிப்பை முடித்து விடுங்கள் என்று படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனி, படத்தை தயாரிக்கும் லைகா ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் ஸ்ட்ரிக்டாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்க உள்ள டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் அதற்கான ஆரம்பகட்ட பணிகள், படப்பிடிப்புக்கான பணிகளை துவங்கி விட்டார். அதன்படி இப்போது குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வேண்டிய முக்கிய நடிகர், நடிகைகள், படப்பிடிப்பு லொகேஷன்கள், படத்துக்கான கதைக்களம் என்பவை குறித்தும், படத்தின் உள்ள கேரக்டர்களுக்கு கலைஞர்களை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

ஹீரோவாக அஜித் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக யார் நடிக்கிறார் என்பதற்கான தேர்வு இப்போது, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பாபி தியோலை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்று படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்து இருக்கிறார். ஆனால் இது சரியான முடிவாக இல்லை என்று படக்குழுவினர் தரப்பின் முணுமுணுப்பு கிளம்பியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்ட அனிமல் படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள கங்குவா படத்திலும் பாபி தியோல் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து ஒரே வில்லனாக நடிப்பது, ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

அதனால் விடாமுயற்சி படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிப்பதை பலரும் விரும்பாத நிலையில், அஜீத்குமார் படத்தில் வில்லனை மாற்றுங்கள் என்று புரொடக்சன் தரப்பிலிருந்து டைரக்டர் ஆதி ரவிச்சந்திரனுக்கு கட் அண்ட் ரைட்டாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து, குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக, ஜான் ஆபிரகாம் நடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்