- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகையின் இயக்கத்தில் கதாநாயகனாகும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்... புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் ரசிகர்கள்... உண்மையிலேயே...

பிரபல நடிகையின் இயக்கத்தில் கதாநாயகனாகும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்… புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் ரசிகர்கள்… உண்மையிலேயே இதுதான் வளர்ச்சி

- Advertisement -

இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளை பட்டியலிட்டால், அதில் நிச்சயம் மலையாள நடிகையான பார்வதி இடம் பெறுவார். அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலமும், எதார்த்தமான டயலாக் டெலிவரி மூலமும் ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார்.

 

- Advertisement -

2006 ஆம் ஆண்டு வெளியான அவுட் ஆப் சிலபஸ் என்னும் திரைப்படத்தின் மூலம் மலையாள உலகில் அவர் அறிமுகமானார். அங்கிருந்து அவர் சில திரைப்படங்களில் நடித்து வர, தமிழ் சினிமாவிலும் அவர் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. சசி இயக்கிய பூ திரைப்படத்தில், மாரியம்மாவாக வாழ்ந்தார் பார்வதி.

 

- Advertisement -

தனது அத்தை மகன் தங்கராசுவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்த அவர், தனது நடிப்பின் மூலம் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். யாருப்பா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறது என்று முன்னணி இயக்குனர்கள் கேட்கும் அளவுக்கு பார்வதியின் நடிப்பு அமைந்தது. தமிழ் கிராமத்து பெண்ணாகவே, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார் பார்வதி.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு பார்வதி வந்தார். இப்போது, அவர் மரியான் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தனது காதலனை உருகி காதலிக்கும் இடத்திலும் சரி, வீரமாக டயலாக் பேசும் இடத்திலும் சரி தனது கண்களினாலே ரசிகர்களை கட்டிப்போட்டார் பார்வதி.

 

நிச்சயம் இவர் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் முழுக்க முழுக்க மலையாள திரைப்படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். சார்லி, பெங்களூர் டேஸ் என அவரது நடிப்பிற்கு ஏற்ற படங்கள் கிடைத்ததால், பல உயரங்களுக்கு சென்றார் பார்வதி. தற்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில் பார்வதி தற்போது, இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் அவர் புதிய திரைப்படம் ஒன்று இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் மம்முட்டி நடிப்பது உறுதியாக இருக்கும் சூழலில், ப்ரிதிவிராஜும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள உலகில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களை வைத்து பார்வதி படம் இயக்க இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்