- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரண்மனை கொடுத்த அதிரி புதிரியான வெற்றி... அடுத்த படத்திற்காக பிரபல நடிகையுடன் டிராவல் செய்யும் சுந்தர்...

அரண்மனை கொடுத்த அதிரி புதிரியான வெற்றி… அடுத்த படத்திற்காக பிரபல நடிகையுடன் டிராவல் செய்யும் சுந்தர் சி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் சக்கரவர்த்தியாக திகழ்பவர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படத்தில் தொடங்கி உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என அவர் கொடுத்த கலகலப்பான திரைப்படங்கள் ஏராளம்.

 

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பின் மீதும் முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் சுந்தர்சி. இதற்கு விதையாக அமைந்தது தலைநகரம் திரைப்படம். ஒரு பக்கம் நாய் சேகர் கதாபாத்திரத்தில் வடிவேலு நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க, இந்தப் பக்கம் ரைட் கதாபாத்திரத்தில் அலற விட்டிருப்பார் சுந்தர் சி.

 

- Advertisement -

அனைத்து விஷயங்களும் பக்காவாக இருந்ததால் தலைநகரம் திரைப்படம் வெற்றி பெற்றது. இதன்பிறகு, தொடர்ந்து படங்களில் நடிப்பதிலேயே அவர் கவனம் செலுத்தி வந்தார். இதில் பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தது. இந்த சமயத்தில் மீண்டும், இயக்கத்தின் பக்கம் சுந்தர் சி திரும்பினார்.

 

இதற்காக கலகலப்பு திரைப்படத்தை அவர் தூக்கி கொண்டு வந்தார். விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா என நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ஸ்டைலில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் சுந்தர் சி.

 

இதன் பிறகு அரண்மனை திரைப்படத்தை அவர் எடுத்தார். ஹாரர் படம் தான் என்றாலும், அதற்கு சமமாக காமெடியை கொடுத்து கலக்கியதால் அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் சுந்தர் சி யின் கைவண்ணத்தில் ஜொலிக்க, மூன்றாம் பாகம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இருப்பினும் மனம் தளராமல், அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை அவர் எடுத்து முடித்து வெளியிட்டுள்ளார்.

 

கோடை விடுமுறையில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அரைத்த மாவையே சுந்தர் சி இந்த திரைப்படத்தில் அழைத்து இருந்தாலும், அது ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி லாபம் படைத்திருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கிறார். இது முதல் பாகத்தின் தொடர்கதையாக எடுக்கப்படுகிறதாம். அதில் இடம்பெற்று இருந்த விமல் மிர்ச்சி சிவாவே இதிலும் நடிக்கிறார்களாம். கூடவே நடிகை வாணி போஜனையும் சுந்தர் சி புக் செய்திருக்கிறார். அவருக்கு என்ன கதாபாத்திரம் என்பது இதுவரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்