கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. முதல் பாதியில் மதுரையை கதைக்களமாக கொண்டும், இரண்டாம் பாதியில் பழங்குடியினரின் வாழ்வின் பின்னணியையும் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
எதிர்பாராமல் வெளியான இந்த திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற, படத்தின் இறுதிக் காட்சியில் ஜிகர்தண்டா படத்தையும் தொடர்பு படுத்தி இருந்தார். சொல்லப்போனால் இது ஜிகர்தண்டா திரைப்படத்தின் ப்ரீக்வல் படம் என்று கூறலாம். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி அவர் சூர்யாவுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இதனை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. படம் குறித்த அறிவிப்பு போஸ்டரில் love laughter war என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் சூர்யாவின் 44-வது திரைப்படமாக எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கங்குவா திரைப்படத்தில் தற்போது சூர்யா நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றது. தற்போது இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து அவர் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாகத்தான் இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இந்த கூட்டணி இணையவில்லை. இதற்கான காரணமும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சுதா கொங்கராவும் அடுத்ததாக திரைப்படத்தை இயக்குவதில் மும்முரம் காட்டி வருகிறார். சூர்யாவும் வாடிவாசல் படத்தில் இணைய நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து விட்டார்.
இந்த ஆண்டின் இறுதியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் சூர்யாவுக்கு வில்லனாக உறியடி விஜயகுமார் நடிப்பதாக தகவல் வழியாக இருக்கிறது. இதுபோக ஜெயராம் மற்றும் நாசர் படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை ஜூன் ஒன்றாம் தேதி அந்தமானில் தொடங்கப்பட குழு திட்டமிட்டுள்ளது. அங்கு பிரம்மாண்ட செட் போடப்பட்டு வரும் நிலையில், அதற்கான வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது.





