- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜர்பைஜானில் அஜீத்குமாரை நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு செய்த அந்த விஷயம், உடனே விஜய்க்கு போன்...

அஜர்பைஜானில் அஜீத்குமாரை நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு செய்த அந்த விஷயம், உடனே விஜய்க்கு போன் போட்ட ஏகே – ஏம்பா இதெல்லாம் நம்பறதா, வேண்டாமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தா. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி இருந்தார், இந்த படம் மாஸ் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தும், மீண்டும் தனது படத்தை இயக்க அஜீத்குமார், வெங்கட்பிரபுவை அழைக்கவில்லை.

ஏனெனில், மங்காத்தா படத்தின் கிளைமேக்ஸில் அஜீத்குமாரை விட அர்ஜூனுக்கு அதிக முக்கியத்துவம் தரும் விதமாக, காட்சியை அமைத்துவிட்டார் என்ற விமர்சனம், படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தன்னை வைத்து ஹிட் படம் கொடுத்த இயக்குனருக்கு மீண்டும் தன் படத்தை இயக்க வாய்ப்பளிப்பதுதான் அஜீத்குமாரின் ஸ்டைல்.

ஆனால் இப்படி மங்காத்தா படத்தில் ஹீரோ அஜீத்குமாரை விட, நடிகர் அர்ஜூனுக்கு அதிக கெத்து காட்டி விட்டதால், வெங்கட்பிரபு மீது அதிருப்தியடைந்த அஜீத்குமார், அதன்பிறகு வெங்கட்பிரபுவுடன் பேசுவதையே தவிர்த்து விட்டார். போன் செய்தால் கூட அஜீத்குமார் வெங்கட்பிரபுவுடன் பேசுவதில்லை என்ற நிலை இருந்தது. தி கோட் படத்தை பெரிய வெற்றிப் படமாக கொடுத்து, அஜீத்குமாரே என்னை அழைத்து படம் இயக்க சொல்ல வேண்டும் என்றெல்லாம் வீரவசனம் பேசிக்கொண்டு இருந்தார் வெங்கட்பிரபு.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன், அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்த நடிகர் அஜீத்குமாரை, இயக்குனர் வெங்கட்பிரபு நேரில் சந்தித்தார். அவருடன் இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மீண்டும் அஜீத்குமார், வெங்கட்பிரபு கூட்டணிக்கான ஆரம்ப சந்திப்பு தான் இது என்றும் பேசப்பட்டது.

இந்த சந்திப்பின் போது நடந்த சம்பவமாக ஒரு தகவல் இப்போது லேட்டஸ்ட் அப்டேட் ஆக வெளிவந்துள்ளது. அஜர்பைஜானில் அஜீத்குமாரை வெங்கட்பிரபு சந்தித்த போது, தன்னுடைய மொபைல் போனில் இருந்த தி கோட் படத்தின் பாடல் காட்சியை அஜீத்குமாருக்கு வெங்கட்பிரபு காட்டியிருக்கிறார். அந்த பாடல் வீடியோவை ரசித்து பார்த்த நடிகர் அஜீத்குமார், உடனே விஜய்க்கு போன் செய்து, அந்த பாடல் காட்சி குறித்து பாராட்டி பேசியிருக்கிறார்.

இப்படி ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக அஜீத்குமார் – விஜய் கூறப்படுகின்றனர். இந்நிலையில் விஜய் பாடல் காட்சியை பார்த்துவிட்டு அஜீத்குமார் பாராட்டினார் என்ற தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும், விஜய் இனி ஒரு படத்தில் மட்டுமே நடித்துவிட்டு அரசியல்வாதி ஆகிறார் என்பதால் விஜய், அஜீத் நட்பு முன்பை விட இப்போது இன்னும் பலப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்