- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் பிரசாந்த் நடிப்பதாக சொன்னவுடன் முகம் மாறிய நடிகர் விஜய், என்ன சொன்னார்...

தி கோட் படத்தில் பிரசாந்த் நடிப்பதாக சொன்னவுடன் முகம் மாறிய நடிகர் விஜய், என்ன சொன்னார் தெரியுமா? – பிரபல தயாரிப்பாளர் சொன்ன பகிரங்க தகவல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் குறிப்பாக 1990களில் தமிழில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன. குறிப்பாக வைகாசி பொறந்தாச்சு, வண்ண வண்ண பூக்கள், ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், ஜோடி, திருடா திருடி போன்ற பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன.

குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நடிகர் பிரசாந்த் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது தி கோட் படத்தில் நடித்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி இருக்கிறார். தி கோட் படத்தில் பிரசாந்த் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் சில காட்சிகளில் அவர் வந்தாலும் படம் முழுக்க பிரசாந்த் இருப்பதும், அவருக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகச் சிறப்பாக செய்ததும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மாதம் வெளியான அந்தகன் படமும் பிரசாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தகன், தி கோட் படங்களை தொடர்ந்து பிரசாந்த் பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் பிரசாந்த் நடிப்பதும் முடிவாகியுள்ளது. இதேபோல் பிரசாந்துக்கு நல்லவிதமான கேரக்டர் என்றால் நடிக்க தயாராக இருக்கிறார். அவரது தந்தை தியாகராஜன் ஆலோசனைப்படி அவர் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து, இரண்டாவது சுற்றில் நடித்து வருகிறார்.

- Advertisement -

தி கோட் படத்தில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா சில காட்சிகளில் நடித்துள்ளார். அவர் தி கோட் படம் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சம்பவத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறுகையில், இந்த படத்தில் பிரசாந்த் நடிக்கிறார் என்ற தகவலை வெங்கட் பிரபு விஜய்யிடம் சொன்னதும், விஜய் டென்ஷன் ஆகிவிட்டார்.

நான் சினிமாவிற்குள் வரும்போதே பிரசாந்த் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தவர். அவரைப் போய் கேரக்டர் ரோலில் நடிக்க வைப்பதா என்று விஜய் என்னிடம் சொன்னார். ஆனால் பிரசாந்த் நடிக்க வந்த பிறகு, பிரசாந்த் உடன் இவ்வளவு நாளாக நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேனே என்று என்னிடம் வருத்தப்பட்டு பேசினார் விஜய். ஏனெனில் பிரசாந்த் பழகுவதற்கு மிகவும் ஜாலியான டைப். நகைச்சுவையான மனிதரும் கூட. அவர் செட்டில் இருந்தாலே எப்போதும் கலகலப்பாகத்தான் இருக்கும். அதுதான் விஜய்க்கும் பிடிக்கும். விஜய்க்கும் பிரசாந்துக்கும் இடையே எப்போதும் ஒரு வைப் இருந்து கொண்டே இருந்தது என்று தயாரிப்பாளர் சிவா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்