இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்து நடித்த படம் மாமன்னன். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான மாமன்னன் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் நாயகன் நாயகியாக நடித்திருந்தாலும் வடிவேலு பகத் பாசில் நடிப்புதான் பெரிய அளவில் கவனம் பெற்றது.
மாரீசன் படத்தை தொடர்ந்து இப்போது நடிகர்கள் வடிவேலு பகத் பாசில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் மாரீசன். தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி தயாரிப்பில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 98வது திரைப்படமாக மாரீசன் படம் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
மாரீசன் படத்தை மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மாரீசன் படத்தில் கோவை சரளா விவேக் பிரசன்னா சித்தாரா பிஎல் தேனப்பன் லிவிங்ஸ்டன் ரேணுகா சரவணா சுப்பையா கிருஷ்ணா ஹரிதா டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி.
அவரே இந்த படத்தில் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். மாரீசன் படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் வடிவேலு கூறியதாவது, மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குனரிடம் இந்த கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.
இராமாயணத்துக்கும் இந்த படத்தின் கதைக்குமான தொடர்பு குறித்து அவர் சொன்னது நன்றாக இருந்தது. மாமன்னன் படத்துக்கு பிறகு மீண்டும் நடிகர் பகத் பாசிலுடன் இணைந்த நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் பகத் பாசில் என்னுடைய ரசிகர் என்பது எனக்கு கூடுதல் மனநிறைவை கொடுக்கிறது.
மாரீசன் படம் சமூக விழிப்புணர்வை பற்றி பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான படம் என்பதையும் தாண்டி அனைவருக்குமான ஒரு நல்ல படமாக மாரீசன் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நடிகர் வடிவேலு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





