சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற பெரிய வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தி கோட். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த படம், கடந்த 5ம் தேதி வெளியானது. உலக அளவில் இதுவரை தி கோட் படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
தமிழில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தி கோட் படத்தை வெளியீடு செய்தது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழில் தி கோட் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை 115 கோடி ரூபாயை தாண்டி வசூலில் முன்னிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தி மற்றும் தெலுங்கில் தி கோட் படம் எதிர்பார்த்த வரவேற்பையும் ஆதரவையும் பெறவில்லை.
குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் தி கோட் வசூல் மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது. அதிலும் தெலுங்கில் தி கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதே நேரத்தில் கடுமையான பாசிட்டிவ் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இது குறித்து எஸ் ஸ்தளத்தில் ஆடியோ ஒன்றில் உரையாடிய போது இயக்குனர் வெங்கட் பிரபு இதுபற்றி பேசியுள்ளார்.
இந்தி மற்றும் தெலுங்கில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் தோல்விக்கு காரணம் இதுதான் என்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசி உள்ளார். அவர் கூறுகையில், தி கோட் படத்தில் சிஎஸ்கே அணியின் சாட்சிகளால் தான் இந்தி மற்றும் தெலுங்கில் படம் சரியாக போகவில்லை என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு சிஎஸ்கே அணியின் மிக தீவிரமான ரசிகன்.
அதனால் பெங்களூரு மற்றும் மும்பை அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். நான் சிஎஸ்கே அணியின் ஆதரவாளர் என்பது ரத்தத்தில் ஊறியது. அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது என்று அதில் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு.
அதாவது இந்தி மற்றும் தெலுங்கில் சிஎஸ்கே அணியை விரும்பாத ரசிகர்கள் இருப்பதால், தி கோட் படத்தில் சிஎஸ்கே அணியினர் வரும் காட்சிகள் காரணமாக இந்தி மற்றும் தெலுங்கில் தி கோட் படம் போதிய வெற்றியை பெறவில்லை. ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனத்திற்கு ஆளானது என்றும் அதில் பகிரங்கமாக பேசி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.





