தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் சிலர் இருக்கின்றனர். அதிலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார் போன்றவர்களின் சம்பளம் ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை இருந்து வருகிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி கோடிகளில் புரள்கின்றனர் என்றால் அது பொய்யல்ல.
ஆனால் தங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சினிமா ரசிகர்களுக்கு மேடையில் பெரிய அளவில் நன்றியும், பாராட்டும் சொல்லும் இந்த நடிகர்கள், நிஜத்தில் அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் இந்த 4 பேரில் நடிகர் விஜய் மட்டுமே விதிவிலக்காக, பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்களை கல்வி விருது விழாவில் ரொக்கப் பரிசு வழங்கி வருகிறார்.
ஆனால் ரஜினி, கமல், அஜீத்குமார் போன்றவர்கள் நெருக்கடியாக காலகட்டத்தில் பேரிடர் நேரங்களில் தமிழக அரசிடம் சில லட்சங்களை மட்டுமே நிதியாக தந்த நிவாரணம் தந்துவிட்டதாக, கடமை முடிந்துவிட்டதாக காட்டிக் கொள்வார்களே தவிர உண்மையில் ரசிகர்கள் மீது எந்தவிதமான அக்கறையும், அன்பும் இல்லாமல், உதவும் மனம் அற்றவர்களாகவே அவர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போதும் அவர்களை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடுவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு ( கேபிஒய்) மூலம் பிரபலமானவர் பாலா. அவருக்கு கேபிஒய் பாலா என்ற பெயரே நிலைத்துவிட்டது. அவரை பொருத்தவரை கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஓடிச் சென்று உதவும் மனம் கொண்டவர். இதுவரை பலருக்கும் அவர் செய்த உதவிகளால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும், கவனமும் பெற்றவர்.
கடந்த முறை டிசம்பர் மாதம் சென்னையில் பலத்த மழை வெள்ளம் ஏற்பட்ட போது, தன்னிடம் இருந்த ரூ. 5 லட்சத்தில் 300 பேருக்கு ரூ. 1000 வீதம் கொடுத்து உதவினார். நைட்டீ, லுங்கி, பெட்ஷீட், தண்ணீர் பாட்டில், ரொட்டி என வீடு வீடாக மக்களை தேடிச் சென்று கொடுத்தார். ஆட்டோ, பைக், 3 சக்கர வாகனம், மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் என வாரி வழங்கி மக்களுக்கு உதவி வருகிறார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக கேபிஒய் பாலா குறித்த தகவல் இல்லாத நிலையில், அவர் இப்போது 3 படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒரு படம் வரும் அக்டோபரில் படப்பிடிப்பு துவங்குகிறது. வைபவ் நடித்த ரணம் படத்தை இயக்கிய செரீப், இந்த படத்தை இயக்குகிறார். நடிப்பில் பிஸியாக இருப்பதால்தான். கேபிஒய் பாலா பற்றிய சமீபத்திய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.





