கடந்த 2021 ஆம் ஆண்டில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். நிலங்களை கடவுள் பெயரைச் சொல்லி ஆக்கிரமிக்கும் போலிச் சாமியாரை அடையாளம் காட்டும் ஒரு திரைக்கதை களத்தில் இந்த படம் இருந்தது.
ஆர்ஜே பாலாஜியின் சிறந்த நடிப்பும், நகைச்சுவை கலந்த காட்சிகளும், அதே நேரத்தில் கடவுள் பெயரில் நடக்கும் போலித்தனங்களை தோலுரிக்கும் விதமான உருவாகி வெளியான மூக்குத்தி அம்மன் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
மூக்குத்தி அம்மன் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து, 3 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
மூக்குத்தி அம்மன் படத்தை முதலில் இயக்கிய ஆர்கே பாலாஜி இப்போது மாசாணி அம்மன் என்ற பெயரில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாராக்கு பதிலாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆர்ஜே பாலாஜிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூக்குத்தி அம்மன் படம் 2ம் பாகத்தை சுந்தர் சி இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகம் பட்ஜெட் 55 கோடி என்று தற்போது தெரிய வந்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற அம்மன் பக்தி படங்கள் என்றால் 10 கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் தான் எடுக்கப்படும் என்ற சூழலில், மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் படம் மட்டும் 55 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சம்பளம், மேலும் ரூ. 100 கோடி வசூலைக் கொடுத்த அரண்மனை 4 படம் இயக்கிய வெற்றிப்பட இயக்குனர் சுந்தர் சி இயக்கும் படம் என்பதால் அதிக பொருட்செலவில் தயாராகிறது. மூக்குத்தி அம்மன் 2 படமும் நிச்சயமாக 100 கோடி ரூபாய் என்ற பெரிய வசூலை எட்டும் என்ற ஒரு சூழலில், இந்த படத்துக்கான பட்ஜெட் 55 கோடி ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு, மிக பிரமாண்டமாக படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.





