- Advertisement -
Homeபொழுதுபோக்குமுரட்டுத்தனமாக அந்த விஷயத்தில் ஈடுபட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், 8 நாட்களாக படுத்த படுக்கையாக...

முரட்டுத்தனமாக அந்த விஷயத்தில் ஈடுபட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், 8 நாட்களாக படுத்த படுக்கையாக கிடக்கும் அவலம் – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…?

- Advertisement -

திரைப்பட கலைஞர்களுக்கு உடல் நலமும், பிட்னஸ் ஆன தோற்றமும் மிக மிக முக்கியமாக இருக்கிறது. சினிமா நடிகர்கள் என்றாலே அவர்களது அழகிய தோற்றமும், ஆரோக்கியமான உடல்கட்டும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது. அதனால் நடிகர்கள் அடிக்கடி ஜிம்முக்குத் சென்று உடற்பயிற்சிகளை செய்வதும், தங்களது உடல் நலகை பராமரிப்பதும் தொடர்கிறது.

இதில் நடிகர்கள் மட்டும் இன்றி நடிகைகளும் தீவிர கவனமும், ஆர்வமும் காட்டுகின்றனர். நடிகர்களை போலவே நடிகைகளும் ஜிம்முக்குச் சென்று ஒர்க் அவுட் செய்தது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீப காலமாக நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா ஜிம்மில் வேர்வை விறுவிறுக்க ஒர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன.

- Advertisement -

தமிழ் சினிமா நடிகைகளின் மிகவும் அழகான, இளமையான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர் படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக துவந்தது. இவர் இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இந்தியில் டெ டெ பியார் டெ 2 என்ற படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். கடந்த 5ம் தேதி காலையில் அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துள்ளார். அப்போது 80 கிலோ எடையுள்ள லிப்ட்வெயிட் செய்திருக்கிறார். அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் பெல்ட் அணியாமல் அந்த கடுமையான உடற்பயிற்சியை செய்ததால் அவருக்கு முதுகில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதற்குப்பிறகு அந்த கடும் வலியை பொறுத்துக் கொண்டு, ரகுல் ப்ரீத் சிங் டெ டெ பியார் டெ 2 படத்தின் சூட்டிங்கில் 2 நாட்கள் கலந்து கொண்டார். அதன் பிறகு முதுகு வலி பயங்கரமாகி பாதிப்பு அதிகரித்ததால் பிசியோ சிகிச்சைக்கு சென்று இருக்கிறார். இதையடுத்து கடந்த 10ம் தேதி அவரது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஒரு மணி நேரம் முன்பு, அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது முதல் அவர் படுத்த படுக்கையாக இருந்து வருவதாகவும், டாக்டர்கள் தீவிரமாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் லிப்ட்வெயிட் செய்த போது ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு ரெஸ்ட் எடுக்காமல் சூட்டிங் சென்றதுதான் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது. இன்று 8வது நாள் படுத்த படுக்கையாக இருக்கும் தனது போட்டோவை வெளியிட்டுள்ள ரகுல் ப்ரீத் சிங், ஹெல்த் ஈஸ் த பிக்கஸ்ட் வெல்த் என்பதை தான் இப்போது புரிந்து கொண்டதாக அதில் கூறியிருக்கிறார். இது தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்