- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல தயாரிப்பாளர் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம், அவருடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கப் போவது...

பிரபல தயாரிப்பாளர் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம், அவருடன் இன்னொரு ஹீரோவாக நடிக்கப் போவது சசிக்குமாரா, விக்ரம் பிரபுவா? – யாருக்கு வாய்ப்பு?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த ஆண்டில் வெளியான படம் லியோ. இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித் குமார் தயாரித்திருந்தார். இதையடுத்து தயாரிப்பாளர் லலித் குமார் தன் மகன் அக்சய் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். தனது மகனை தமிழில் சினிமாவில் பெரிய ஹீரோவாக்கும் திட்டத்தில் அவர் ரூ. 50 கோடி வரை மகனின் படங்கள் தயாரிப்புக்காக ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அக்‌ஷய்குமார் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இந்த புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த சுரேஷ் என்பவர் இயக்குகிறார். ஆனால் இந்த படத்தின் கதை டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் எழுதிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்களை கொண்ட இந்த படத்தில், போலீஸ் – கைதி இடையிலான பிரச்னைகளை மையப்படுத்தி அந்த சம்பவங்களை கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த படம் விசாரணை படத்தின் மற்றொரு பகுதியாக இருப்பதாக, இந்த படத்தின் கதையை கேட்ட இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த புதிய படத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் அகசய் குமார் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். எனினும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பே தகவல் பரவியது. இப்போது இன்னொரு ஹீரோவாக நடிக்க இருப்பது நடிகர் சசிகுமார் என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு வேளை அவர் சம்மதிக்காத பட்சத்தில், அந்த கேரக்டரில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே டாணாக்காரன் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் தமிழ் டைரக்ட் செய்திருந்தார். எனவே அக்‌ஷய் குமார் அறிமுகமாகும் இந்த படம், இயக்குனர் தமிழ் எழுதிய கதை என்பதால், ஒருவேளை இந்த படத்தில் விக்ரம் பிரபு நடிக்க முக்கியத்துவம் தரலாம். அதன்படி லலித்குமார் மகன் அக்சய்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கப் போவது சசிக்குமாரா அல்லது விக்ரம் பிரபுவா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. எனினும் சசிகுமார் மறுக்கும் பட்சத்தில் மட்டுமே, இந்த படத்தில் விக்ரம் பிரபு நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்