- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசியலில் எக்ஸ்ட்ரா லக்கேஜாக பத்துடன் பதினொன்றாக வரவில்லை, வந்த வேலையை பிசிறு தட்டாமல் செய்வோம்,...

தமிழக அரசியலில் எக்ஸ்ட்ரா லக்கேஜாக பத்துடன் பதினொன்றாக வரவில்லை, வந்த வேலையை பிசிறு தட்டாமல் செய்வோம், நெருப்பா இருப்போம் – அரசியல் மாநாட்டில் அசத்திய தளபதி!

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விசாலை கிராமத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் மாநில தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை பாம்பை பார்த்தால் என்ன செய்யும்.

தன்னுடைய அம்மாவை பார்த்து சிரித்த அதே சிரிப்புடன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அந்த பாம்பையும் தன் கையில் எடுத்து பிடித்து விளையாடும். அப்போது அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இல்லையா என்ற கேள்வி எழும். பாச உணர்வே என்னவென்று சொல்லத் தெரியாத குழந்தைக்கு பயம் என்பது மட்டும் எப்படி சொல்ல தெரியும். இங்கு அந்த பாம்புதான் அரசியல். அதை கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பதுதான் உங்கள் விஜயின் வேலை.

- Advertisement -

அரசியலுக்கு நான் குழந்தைதான். இது அடுத்தவர்களுடைய கமெண்ட் ஆனால் பாம்பாக இருந்தாலும் பயம் இல்லை என்பதுதான் நம்முடைய கான்பிடன்ட். ஏனென்றால் அரசியல் ஒன்றும் சினிமா இல்லை. டாக்கி பீல்ட். கொஞ்சம் சீரியஸ் இருக்கத்தான் செய்யும். அதனால் பாம்பாக இருந்தாலும் பாலிடிக்ஸ் ஆக இருந்தாலும் கையில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததற்கு பிறகு சீரியஸோடு கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுவது தான் நம்முடைய வழி.

ஏனெனில் அப்படிப்பட்ட செயல்பாட்டில் இறங்கினால் தான் இந்த பீல்டில் நிலையாக இருக்க முடியும். ஒரு எனர்ஜியுடன் செயல்பட முடியும். எதிராக இருப்பவர்களை டேக் செய்யவும் முடியும். இந்த தாறுமாறாக ஆடுகிற ஆட்டம் எல்லாம் இல்லை. தத்துவத்துடன் ஆடுகிற ஆட்டம்ன்னு சொல்லி சும்மா கூச்சல் போடவும் முடியாது. கவனமாக செயல்பட வேண்டும்

- Advertisement -

நம்முடைய அரசியல் கொள்கை கோட்பாடுகளில் சமரசத்துக்கோ சண்டைக்கோ எப்போதும் இடம் இல்லை. அதற்காக இந்த வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப்போவதில்லை. எதை நினைத்து அரசியலுக்கு வந்திருக்கிறோமா அதை கொஞ்சமும் பிசிறு தட்டாமல் செய்யப் போகிறோம். அதுவரை நெருப்பாக தான் இருப்போம். ஆனால் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் யோசனையும் நிதானமும் இருக்க வேண்டும்.

எதிரிகள் இல்லாத களம் இருக்க முடியாது. நம்முடைய வெற்றியை தீர்மானிப்பதே எதிரிகள்தான். அரசியலில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆக பத்தோடு பதினொன்றாக வரவில்லை. தெளிவான முடிவோடுதான் வந்திருக்கிறேன். பின்வாங்கும் எண்ணமே இல்லை. மக்கள் விரோத அரசை, திராவிட மாடல் அரசு என்று ஏமாற்றுகின்றனர். இனி இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு நடக்காது. 2026ம் ஆண்டில் தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று விஜய் பேசினார்.

- Advertisement -

சற்று முன்