- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசைத்துறையில் பெண் இசையமைப்பாளர்கள் அதிகம் இல்லாதது ஏன்? இசைஞானி இளையராஜாவிடம் நேரடியாக கேள்வி கேட்ட ரசிகை...

இசைத்துறையில் பெண் இசையமைப்பாளர்கள் அதிகம் இல்லாதது ஏன்? இசைஞானி இளையராஜாவிடம் நேரடியாக கேள்வி கேட்ட ரசிகை – உடனடி பதில் தந்த இசைஞானி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா பெயரை உச்சரிக்காமல், கடந்த 47 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றை பேசிவிட முடியாது. கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு, அவர் இசையமைத்த ஒவ்வொரு படமும் அவரது இசைக்காக கொண்டாடப்பட்டன என்றால் மிகையல்ல.

குறிப்பாக 1980, 90களில் இளையராஜா இசை இல்லாமல் திரைப்படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இசையில் சக்ரவர்த்தியாக கோலோச்சி ரசிகர்களின் மனதில் ராஜசிம்மானத்தில் அமர்ந்தவர்தான் இளையராஜா. இன்றும் அந்த சிம்மாசனத்தை விட்டு அவர் இறங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இளையராஜா குறித்து தனிப்பட்ட முறையில் அவர் பேசும் சர்ச்சையான விஷயங்கள் குறித்து ரசிகர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. என்றாலும் இசையை பொருத்தவரை ராஜா ராஜாதான் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இப்போதும் ரஜினி கமல், விஜய் அஜீத் என முன்னணி ஹீரோக்கள் படங்களைக் கொண்டாட அவர் இசையமைத்த பாடல்கள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றன.

படத்தின் கதை, நடிகர்களின் கேரக்டர்கள் மோசமாக இருந்தாலும், இசையால் பேசப்பட்ட படங்களின் வெற்றி பெற காரணம், இளையராஜாவின் இசை தான் என்றால் அது மிகையல்ல. எனக்கு ரஜினி கமல் போன்ற பெரிய நடிகர்கள் மட்டுமல்ல, ராமராஜன் போன்றவர்களுக்கும்நான் அதே ஈடுபாட்டோடுதான் இசையமைப்பேன் என்று ஒரு முறை மேடையில், ரஜினி கமல் முன்னிலையில் தன் உணர்வை பகிர்ந்தவர் இளையராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இளையராஜா இப்போதும் தொடர்ந்து பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். 2 பாகங்களாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் இளையராஜா கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஆண் இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உள்ள நிலையில், பெண் இசையமைப்பாளர்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கிறது. சமீபத்தில் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா பங்கேற்றார். அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் இளையராஜா உரையாடினார் அங்கிருந்த பெண் ரசிகை ஒருவர், இசைத்துறையில் ஏன் பெண் இசையமைப்பாளர்கள் அதிகமாக இல்லை என்று இளையராஜாவிடம் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்பினார். அப்போது இளையராஜா சற்றும் யோசிக்காமல், நீ வா… வந்துடு நீ வந்துடு யோசிக்கவே வேணாம் என்று சிரித்தபடி கூறியவர், ஆல் தி பெஸ்ட் என்றும் கூறினார் அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்