- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் நித்யாமேனன் எடுத்த முடிவு, திடீர் சிக்கலை சமாளிக்க இயக்குனர் போட்ட...

ஹீரோ விஜய் சேதுபதி, ஹீரோயின் நித்யாமேனன் எடுத்த முடிவு, திடீர் சிக்கலை சமாளிக்க இயக்குனர் போட்ட பக்கா பிளான் – ஏலே… நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுன்னு நிரூபிச்சிட்டலே!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில் அவருக்கு மகாராஜா படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இது விஜய் சேதுபதி நடித்த 50வது படம் என்ற நிலையில், நித்திலன் சாமிநாதன், விஜய் சேதுபதிக்கு ஒரு கம்பேக் படமாக மகாராஜா படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார்.

இதையடுத்து தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தி வரும் விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் பரோட்டா மாஸ்டராக அவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக மத்திய அரசி்ன் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் தனுஷ் இயக்கும் இட்லிக்கடை படத்திலும் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே விடுதலை படத்தில் நடித்துள்ளார். காமெடி நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமான இந்த படத்தில், பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்போது விடுதலை 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் விடுதலை 2 படத்தில் விடுபட்ட காட்சிகளை திரும்ப எடுக்கும் பேட்ச் ஒர்க் பணிக்காக, இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்துள்ளார். இதற்காக 10 நாட்கள் பிரேக் கேட்டு, இயக்குனர் பாண்டிராஜனிடம் அனுமதி கேட்டு விடுதலை 2 ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி.

அதே போல் நடிகை நித்யாமேனனும், வேறு ஒரு படத்தில் அவசரமாக நடிக்க வேண்டிய கால்ஷீட் இருப்பதால் அவரும் 10 நாட்கள் பிரேக் எடுத்துக்கொண்டு அந்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அது தனுஷ் இயக்கும் இட்லி கடை படமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படி படத்தின் நாயகன், நாயகி இருவருமே 10 நாட்கள் பிரேக் எடுத்துச் சென்ற நிலையிலும் மற்ற நடிகர்கள், கேரக்டர்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை ஷூட் செய்ய அந்த 10 நாட்களை பக்காவாக பிளான் பண்ணி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பாண்டிராஜ் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்