- Advertisement -
Homeபொழுதுபோக்குகீர்த்தி சுரேஷை தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை... அடேங்கப்பா... திரையுலகில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு...

கீர்த்தி சுரேஷை தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை… அடேங்கப்பா… திரையுலகில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒரே கெட்டி மேள சத்தம்தான் போல…

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது, இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்ட அவர், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

 

- Advertisement -

இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது திருமணம் செய்ய முடிவை எடுத்திருக்கிறார். தனது நீண்ட கால ஆண் நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை தான் அவர் கரம் பிடிக்கிறார். ஆண்டனி தட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.

 

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த், விஜய், சூர்யா என மூத்த நடிகர்களின் கதையில் இடம் பெற்றவர். அதுபோக தனது சிறந்த நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்திருக்கிறார். முக்கியமாக அவர் தெலுங்கில் நடித்த மகாநடி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

 

இதில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பேட்டி ஒன்றில் கூறும் போது தான் காதலித்து தான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். இப்படியான சூழலில் தான் அவர் ஆண்டனி தட்டிலை கரம் பிடிக்க இருக்கிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷை தொடர்ந்து நடிகை தமன்னாவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்ய இருக்கிறார்.

 

இவரும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர அதை வெளிப்படையாக கூறுவதில் தயக்கம் காட்டியே வந்தனர். ஒரு கட்டத்தில் இதனை ஒப்புக்கொண்ட தமன்னா, 2025 ஆம் ஆண்டு தங்கள் திருமணம் நடைபெறும் என்று கூறி இருந்தார்.

 

இந்த நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே, அவர் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். விஜய் வர்மா தமன்னா ஜோடியின் திருமணம் மிக விமர்சையாக நடைபெற இருக்கிறது. தனது திருமணத்திற்காக, தயாராகி வரும் தமன்னா தற்போது ஒப்புக்கொண்டுள்ள திரைப்படங்களை விரைந்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதற்கான வேலைகளில் அவர் பிஸியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்