- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை தெய்வ மச்சான் என்றுதான் நடிகர் சூர்யா அழைப்பார், அவருக்கு காதல் தூது போன புறா...

என்னை தெய்வ மச்சான் என்றுதான் நடிகர் சூர்யா அழைப்பார், அவருக்கு காதல் தூது போன புறா நான்தான், உண்மையை போட்டுடைத்த பிரபல காமெடி நடிகர்!

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் நடிகர் சூர்யா. இப்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். ஆரம்பத்தில் ஜோதிகாவுடன் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், பேரழகன் போன்ற படங்களில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் துவக்கத்தில் இவர்களது காதலை நடிகர் சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் சூர்யாவின் விருப்பம் காரணமாக சூர்யா, ஜோதிகா திருமணத்துக்கு சம்மதித்தார்.

சூர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் ரமேஷ் கண்ணா. இவர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தொடரும் என்ற அஜீத்குமார் படத்தை இயக்கியவர். சூர்யா நடித்த ஆதவன் படம் இவரது கதை, திரைக்கதையில்தான் உருவானது. பிரண்ட்ஸ், உன்னை நினைத்து படங்களில் சூர்யாவுக்கு நண்பராக நடித்திருப்பார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியதாவது, அப்போது ஜோதிகாவை, சூர்யா லவ் செய்தார். நான் பிரண்ட்ஸ் படத்திலும், தெனாலி படத்திலும் மாறி மாறி பிஸியாக அப்போது நடித்துக்கொண்டு இருந்தேன். பொள்ளாச்சியில், பிரண்ட்ஸ் ஷூட்டிங்கில் விஜய், சூர்யாவுடன் நடிப்பேன். பிறகு இரவில் கொடைக்கானலுக்கு காரில் சென்று தெனாலி ஷூட்டிங்கிலும் கலந்துக்கொள்வேன்.

இப்படி மேலே, கீழே காரில் சென்று நடித்தேன். அப்போது நான் தெனாலி ஷூட்டிங் செல்லும்போதெல்லாம், தெனாலி படப்பிடிப்பில் இருக்கும் ஜோதிகா குறித்து அடிக்கடி சூர்யா என்னிடம் கேட்பார். எப்படி இருக்காங்க என்பார். அதே போல், தெனாலி ஷூட்டிங்கிலும் ஜோதிகாவிடம், சூர்யா உங்களை பத்தி விசாரிச்சாங்க தங்கச்சி என்று சொல்வேன்.

- Advertisement -

அதற்கு ஜோதிகாவும் வெக்கப்படுவார். அவரும் சூர்யாவை கேட்டதாக சொல்லுங்கள் என்று ஆங்கிலத்தில் சொல்வார். பிறகு நான் பிரண்ட்ஸ் படப்பிடிப்புக்கு கீழே வரும்போது சூர்யாவிடம் சொல்வேன். இப்படி ஜோதிகா – சூர்யா இருவருக்கும் நான் காதல் தூது போகிற புறாவாக இருந்தேன்.

தெனாலி படத்தில் கமல்ஹாசன், ஜோதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்த ஜெயராமை தெய்வ மச்சான் என அழைப்பார். அதே போல், தங்கச்சி ஜோதிகாவிடம் நான் காதல் தூது போனதால் என்னையும் சூர்யா, தெய்வ மச்சான் என்றுதான் கிண்டலாக அழைப்பார் என்று அந்த நேர்காணலில் நடிகர் ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்