- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் தனது உறவை விட்டுத் தந்த நடிகர் தனுஷ், ஒரு ரசிகனாக தன் உணர்வை...

அந்த விஷயத்தில் தனது உறவை விட்டுத் தந்த நடிகர் தனுஷ், ஒரு ரசிகனாக தன் உணர்வை தவறாமல் வெளிப்படுத்திய அவருக்கு குவியும் பாராட்டு – இது தரமான செயல் ப்ரோ…!

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குனர் செல்வராகவனின் தம்பி ஆகிய அடையாளங்ளோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால் இப்போது தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா, தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் என்று சொல்லும் அளவுக்கு உச்சத்தை தொட்டிருக்கிறார்.

அண்ணன் செல்வராகவன் காட்டிய வழியில், நடிப்பு பயணத்தை துவங்கிய தனுஷ் இன்று அவரே நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி, தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக உருவாகி இருக்கிறார்.

- Advertisement -

தனுஷ் சினிமாவில் வளர்ந்த காலகட்டத்தில் 2004ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை, காதல் திருமணம் செய்துக்கொண்டார். இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் சிறப்பாக நடந்தது. அன்னியோனியமாக குடும்ப வாழ்க்கை நடத்திய அவர்களுக்கு லிங்கா, யாத்ரா என 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களால் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து கேட்ட நிலையில், 2 வாரங்களுக்கு முன் அவர்களுக்கு சட்டப்படியான விவாகரத்து வழங்கப்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

- Advertisement -

இதற்கிடையே கடந்த 20 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் என்ற அடையாளத்தில் இருந்த தனுஷ், இப்போது அந்த உறவை இழந்து விட்டார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த உறவை விட்டுத் தந்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகன் என்ற உணர்வை அவர் விட்டுத் தரவில்லை என்பதை இன்று நிரூபித்து பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று, நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான். மாஸ் காட்டுவதிலும், ஸ்டைலிலும் என்றும் அவர்தான். என் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று அதில் பதிவிட்டுள்ளார். மனைவியை பிரிந்தாலும், முன்னாள் மாமனார் ரஜினிகாந்தின் ரசிகனாக எப்போதும் என் அன்பு அவர் மீது இருக்கும் என்பதை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்