தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மிக அழகான நடிகை சமந்தா. பல வெற்றிப் படங்களில் நடித்த சமந்தா, கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் 4 ஆண்டுகளில் அவர்களது திருமண உறவு முறிந்து, 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே மயோசிடிஸ் என்னும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்கான மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார். இன்னும் நோய் பூரண குணமாகாத நிலையிலும், சிட்டாடல் என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு, நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த திரிஷாவின் தோழியாக வானதி என்ற கேரக்டரில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், வரும் 2025ம் ஆண்டில் ரிஷபம், கன்னி, மகர ராசியினர் இவற்றை பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த 3 ராசிக்காரர்களும் அடுத்த ஆண்டு மிகவும் பிஸியாக இருப்பார்கள். தொழில் ரீதியாக முன்னேறுவார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
இன்னும் நம்பிக்கையுடன் காதலை அளிக்கும் துணைவரை பெறுவார்கள். குழந்தைகளையும் பெற்றுக் கொள்வார்கள். லட்சியங்களை அடைவார்கள். வருமானத்தை உயர்த்திக் கொள்வார்கள். மேலும் பல வாய்ப்புகளை பெறுவார்கள். உடல் ரீதியாகவும் பலமாக இருப்பார்கள். இதில் இருப்பவை எல்லாம் நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று அந்தப் பதிவில் நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தா ரிஷப ராசிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் வரும் 2025ம் ஆண்டு ஜோதிட ராசிப்படி தனக்கு இன்னும் நம்பிக்கையுடன் காதலை அளிக்கும் துணைவரை பெறவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது என்று சூசகமாக நடிகை சமந்தா கூறி இருக்கிறார். நாக சைதன்யா 2வது திருமணம் செய்த நிலையில், நடிகை சமந்தாவும் 2வது திருமணத்துக்கு தயாராகி விட்டார் என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது.





