ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நடந்தது. அதில் ரஜினி பேசியது பின்வருமாறு, அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். கொரோனா காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. ஜெயிலர் படத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அண்ணாத்தை படத்திற்கு பிறகு எனக்கு சரியான கதையோ சரியான இயக்குனரோ அமையவில்லை. ஒரு படத்திற்கு இயக்குனர் மிக மிக முக்கியம்.
என்னுடைய திரைப் பயணத்தில் இயக்குனர்கள் தான் என்னை மென்மேலும் உயர்த்திக் கொண்டு வந்தனர். நான் இன்று வரை திரையுலைகள் இருப்பதற்கு காரணமே இயக்குனர்கள் தான். ஒருநாள் சன் பிக்சரத்திலிருந்து எனக்கு கால் செய்து, நெல்சனிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது கேட்கிறீர்களா என்று கேட்டார்கள். நானும் ஓகே சொன்னேன். தற்போது அவர் ஷூட்டிங்கில் உள்ளார் அதனால் 20 நாட்கள் கழித்து வருவதாக கூறியிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார். நானும் சரி என்று சொன்னேன்.
ஆனால் இருபது நாட்கள் ஆகிவிட்டது 30 நாட்களாகி விட்டது ஆனாலும் அவர் வரவில்லை. பிறகு நான் கேட்டதற்கு, உங்களிடம் கதை சொல்வதற்கு சற்று நடுக்கமாக இருக்கிறதாம் அதனால் மேலும் ஒரு பத்து நாட்கள் கேட்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள். நானும் சரி என்று சொன்னேன். பிறகு ஒரு நாள் காலை 10 மணிக்கு வர சொன்னேன். உடனே சன் பிக்சர்ஸ் கண்ணன் சொன்னார், சார் அவர் இரவில் தூங்குவதற்கு சற்று தாமதமாகும் அதனால் காலை ஒரு பதினொன்று முப்பதுக்கு வர சொல்லவா என்று கேட்டார். நானும் யோசித்து விட்டு சரி என்று கூறினேன்.
அடுத்த நாள் 11.30 ஆனது ஆனால் ஆளையே காணோம். 12 மணி வரை அவர் வரவே இல்லை. ஒரு வழியாக வீட்டிற்குள் வந்து விட்டார். உடனே அவரிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்க, ஒரு நல்ல காபி தாங்க என்று சொன்னார்.
இதற்கிடையில் அவர் என்னை பார்த்துவிட்டு, இந்த ஆள் ஹீரோவா என்ற தோரணையில் பார்த்தார் .அவர் மனதில் யோசித்தது எனக்கு தெரிந்து விட்டது. அதன் பிறகு கதை சொல்லத் தொடங்கினார். அவர் சொன்னது எனக்கு பிடித்தது. நான் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்து சில நாட்கள் கழித்து நான் இந்த கதையை டெவலப் செய்து விட்டு உங்களிடம் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு நெல்சன் கிளம்பி விட்டார்.
அவர் சொன்னது போல பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு மீண்டும் வந்து கதை சொன்னார். அப்போது அவர் சொன்ன கதை முதலில் சொன்ன கதையை விட 100 மடங்கு சிறப்பாக இருந்தது. அதன் பிறகு சிறிதாக ஒரு வீடியோ எடுத்து படத்தை அறிவித்துவிட்டோம். அதன் பிறகு தான் பீஸ் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அதன் ரிவ்யூ சரியாக இல்லை. எனக்கு தெரிந்த நண்பர்களும் டிஸ்ட்ரிபியூட்டர்களும் எனக்கு போன் செய்து நெல்சன் படத்தில் நடிக்க வேண்டுமா என்று யோசியுங்கள் என்று கூறினார்கள்.
அதனைத் தொடர்ந்து நான் சன் பிக்சர்ஸ் இடம் பேசினேன். அவர்கள், ரிவ்யூ எப்படி இருந்தாலும் படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவருக்கும் நல்ல லாபமாகவே பீஸ்ட் உள்ளது. நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து கூறினார்கள். இதன் பிறகு நாங்கள் ஷூட்டிங்கில் இறங்கினோம்.
முதல் நாள் ஷூட்டிங்கில் பஸ் ஷாட் முடிந்து நான் அமர்ந்திருந்த போது நெல்சன் என் அருகில் வந்து, சார் உங்கள் முதல் காதலை பற்றி சொல்லுங்கள். நீங்கள் எந்த ஹீரோயினை எல்லாம் காதலித்தீர்கள், உங்களை எந்த ஹீரோயின்கள் எல்லாம் காதலித்தார்கள் என்று சொல்லுங்கள் என்றார். நான் உடனே என்ன நெல்சன் இது என்று கேட்டேன். சார் கொஞ்சம் சார்ஜ் ஏத்திக்கணும், உங்க வாயால் நீங்கள் அந்த கதையை சொல்லும் போது கொஞ்சம் உத்வேகமாக இருக்கும் என்று சொன்னார் நெல்சன். என்னடா இது இவர் இவரை சார்ஜ் ஏத்திக் கொள்வதற்கு நாம் நமது காதல் கதையை சொல்ல வேண்டுமா என்று நினைத்தேன் நான்.
அவர் இப்படி ஜாலியாக பேசினாலும் டைரக்ஷன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். ரம்யா கிருஷ்ணனும் நானும் இணைந்து நடித்த ஒரு சீனில் எட்டு டேக் எடுத்தார். அந்த நீலாம்பரி முன்னால் இந்த படையப்பா உடைய மானமே போச்சு. படத்தில் பிளாக் காமெடி சிறப்பாக வந்துள்ளது. காவலா பாட்டில் என்னுடைய ஸ்டெப் பயங்கரமாக இருக்கும் என்று பில்டப் கொடுத்து என்னை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கு சென்றால் எனக்கு இரண்டே இரண்டு மூமெண்ட்ஸ் தான் கொடுத்தார்கள்.
யாரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள். போதைப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் நான் இன்னும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இருப்பேன். குடிப்பழக்கம் என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம்.
காட்டில் பெரிய மிருகங்களை சிறிய மிருகங்கள் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் மேலே பறந்து கொண்டிருக்கும் கழுகு கீழே இறங்கினால் அதை கொத்துவதற்கு காகம் முயற்சிக்கும். மீண்டும் கழுகு இறக்கையை கூட அசைக்காமல் சட்டு என்று மேலே பறக்கும் ஆனால் காகத்தால் மேலே பறக்க முடியாது.
என்னுடைய படங்களுக்கு பிரச்சனை தொடங்கியது எப்போது கிடையாது. 1977 லேயே என் படங்களுக்கான பிரச்சனை துவங்கியது. ஒரு கட்டத்தில் என்னுடைய பெயருக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இணைக்க வேண்டும் என்று சொன்னார்கள் ஆனால் நான் அப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் என்னை விடவும் சிறப்பாக நடிக்க கூடிய கமல், சிவாஜி போன்றோரெல்லாம் அப்போது நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், ரஜினி பயந்துவிட்டார் அதனால் தான் அப்படி சொல்கிறார் என்று அப்போது சொன்னார்கள். நான் பயப்படுவது இரண்டு பேருக்கு தான் ஒன்று கடவுள் இன்னொன்று நல்ல மனிதர்கள் என்று கூறினார் ரஜினிகாந்த்.
இதையும் படிக்கலாமே: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியது இது தான். முழுமையான பேச்சு இதோ





