- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சீன் வந்த போது தியேட்டரை விட்டு வெளியே வந்துவிட்டேன்; பிறகு 15 நிமிடங்கள் கழித்துதான்...

அந்த சீன் வந்த போது தியேட்டரை விட்டு வெளியே வந்துவிட்டேன்; பிறகு 15 நிமிடங்கள் கழித்துதான் உள்ளே போனேன் – நடிகர் அரவிந்த் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஹீரோக்களாக நடித்தாலும் சிலர் மட்டுமே அந்த ஹீரோவுக்குரிய சர்வ லட்சணங்கள் பொருந்திய சிறந்த அழகான நடிகர்களாக ரசிகர்களின் மனதை கவர்கின்றனர். மற்ற நடிகர்களின் நடிப்பு திறமையால் கவர்வதை போல இவர்களது அழகான தோற்றமும் பிளஸ் பாயிண்ட் ஆக அமைகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை தனது அழகால் கவர்ந்த நடிகர்கள் வரிசையில் எம்ஜிஆர் கமல்ஹாசன் அரவிந்த் சாமி பிரசாந்த் அஜீத்குமார் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லாம். ஏனென்றால் இயல்பிலேயே அவர்களது அழகான தோற்றம் ரசிகர்களின் மனதில் தங்கியது.

- Advertisement -

அந்த வகையில் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டர் கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் அரவிந்த் சாமி. தொடர்ந்து ரோஜா படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு பம்பாய் மின்சார கனவு மறுபடியும் இந்திரா புதையல் என் சுவாசக் காற்றே அலைபாயுதே சாசனம் என பல படங்களில் நடித்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தனி ஒருவன் போகன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் மெய்யழகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். 54 வயதான நிலையிலும், அரவிந்த் சாமியின் அழகான தோற்றம், கம்பீரம் மாறாமல் இருப்பதால் ரசிகர்கள் அவரை இப்போதும் பழையபடியே ரசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி கூறியதாவது, தளபதி படத்தில் நடித்ததை என் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது கேரக்டராக மட்டுமே இருந்தது. ஆனால் ரோஜா படத்தில் நடித்த போது எனக்கு சில விஷயங்கள் தர்ம சங்கடமாகி விட்டது. ரோஜா படம் பார்த்த போது என் அப்பா அருகில் அமர்ந்திருந்தார். அவர் மீது எனக்கு பயம், மரியாதை இருந்தது.

அதனால் புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது என்ற காதல் பாடல் காட்சி வந்த போது, நான் கொஞ்சம் வெளியே செல்கிறேன் என என் அப்பாவிடம் பேஸ் வாஷ் பண்ண போறேன்னு சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன். பிறகு அந்த பாடல் காட்சி முடிந்து 10 நிமிடங்கள் கழித்துதான் உள்ளே சென்று அவர் பக்கத்தில் அமர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அந்த பாடல் காட்சியை அவருடன் அமர்ந்து பார்க்க எனக்கு சங்கடமாக இருந்தது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்