தமிழ் சினிமாவில் புகழில் நடிகர் ரஜினிகாந்தின் உயரம் என்பது யாரும் சொல்லித் தெரிவதில்லை. இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான். ஆனால் இப்போதும் தன்னை ஒரு சாதாரண மனிதராக தான் அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார். உச்சம் தொட்டும் இன்னும் எளிமையாக தான் இருந்து வருகிறார்.
அதே போல் நடிகர் கமல்ஹாசனும் இருந்து வருகிறார். விஜய், அஜீத்குமார் போன்ற அடுத்தகட்ட நடிகர்களிடமும் அந்த பணிவை அடக்கத்தை காண முடிகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரஜினி கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களே பணிவாக, மரியாதையாக இருப்பதுதான்.
இன்னும் கூட ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் வாகனத்துக்கு ரெப்ரெஷ் செய்துக்கொள்ள செல்வதாக இருந்தாலும் படத்தின் இயக்குனரிடம் தகவல் சொல்லிவிட்டுதான் செல்வது வழக்கம். இயக்குனர் பேக்கப் சொல்லாமல், ஒரு நாள் ரஜினி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பியதில்லை.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. இயக்குனர் மற்றும் நடிகர் ஏ வெங்கடேஷ் இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். என்னுடைய டைரக்ஷனில் விஜய் நடித்த படம் பகவதி. இந்த ஷூட்டிங் சென்னையில் நடந்துக்கொண்டு இருந்தது.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் ஷூட்டிங்கும் அருகில் நடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தெரிந்துக்கொண்ட நடிகர் விஜய், அருகில் பாபா ஷூட்டிங் நடக்கிறது. நான் போய் ரஜினி சாரை பார்த்துவிட்டு வந்து விடுகிறேன் என்றார். நானும் இந்த ஷாட் முடிந்தவுடன் சென்று வாருங்கள் என்று கூறினேன்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அங்கு ரஜினி சார் நேரில் வந்து விட்டார். விஜய் பட ஷூட்டிங் அருகில் நடப்பதாக அவருக்கு யாரோ தகவல் சொல்ல, உடனே விஜயை நேரில் பார்க்க ரஜினியே வந்துவிட்டார். அதன்பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அந்தளவுக்கு விஜய் மீது அன்பு கொண்டவர் ரஜினி. அதே போல் விஜயும் ரஜினியின் தீவிர ரசிகராக எப்போதும் இருக்கிறார் என்று இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.





