- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு கண்டிஷன் போட்டா யார்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க? 44 வயது முரட்டு சிங்கிள் நடிகை...

இப்படி ஒரு கண்டிஷன் போட்டா யார்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க? 44 வயது முரட்டு சிங்கிள் நடிகை மும்தாஜ் கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அழகும் நடிப்பு திறமையும் உள்ள ஒரு நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிஷா என்ற படம் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து குஷி வேதம் சாக்லேட் மலபார் போலீசார் உனக்காக எல்லாம் உனக்காக லூட்டி சொன்னால்தான் காதலா ராஜாதி ராஜா வீராசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பல படங்களில் மும்தாஜ் நடித்திருந்தாலும் பெரும்பாலும் இவருக்கு கவர்ச்சியான கேரக்டர்களே தரப்பட்டன. ராஜாதிராஜா போன்ற சில படங்களில் வில்லி கேரக்டரிலும் மும்தாஜ் நடித்திருந்தார். நல்ல அழகும், நடிப்பு திறமை இருந்தும் நாயகியாக நடிக்க வாய்ப்பின்றி சினிமாவை விட்டு காணாமல் போனவர்களில் மும்தாஜூம் ஒருவர்.

- Advertisement -

இதற்கிடையே விஜய் டிவியில் 2018ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 2ல் மும்தாஜ் கலந்துக்கொண்டார். நிறைய நாட்கள் அந்த வீட்டுக்குள் மும்தாஜ் இருந்த நிலையில், டைட்டில் வின்னராக கடைசி வரை போராடினர். பல டாஸ்க்குகளில் நல்ல திறமையாக விளையாடினார். ஆனால் இவர் டைட்டில் வின்னராக வெற்றி பெற முடியவில்லை.

நடிகை மும்தாஜ், கடந்த 1980ம் ஆண்டில் பிறந்தவர். இப்போது அவருக்கு 44 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். சமீபகாலமாக ஆன்மீகத்தில் அவர் அதிக நாட்டம் கொண்டவராகவும் மாறியிருக்கிறார். திருமணம் குறித்த ஆர்வமே இல்லை என்றும் கூறி வருகிறார்.

- Advertisement -

ஒரு நேர்காணலில் தனது திருமணம் குறித்து நடிகை மும்தாஜ் கூறியதாவது, என்னை யார் திருமணம் செய்துக்கொள்ள முன்வருவார்கள்? நான் எவ்வளவு அழகாக இருந்தாலும், எவ்வளவு க்யூட்டாக தெரிந்தாலும் எனக்குள் ஒரு ராட்சஷி இருக்கிறாள். என்னை மாதிரி ஒரு நல்லவளும் இல்லை, என்னை மாதிரி ஒரு கெட்டவளும் இல்லை.

இதை எல்லாம் மீறி என்னை ஒருவர் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர் ஒரு சிறப்பான டாக்டராக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் ஒரு நோயாளி என்று அந்த நேர்காணலில் மும்தாஜ் கூறியிருக்கிறார். நான் ஒரு ராட்சசி என்று அவரே ஓபனாக சொன்ன பிறகு யார்தான் திருமணம் செய்ய முன்வருவார்கள் என்று ரசிகர்களே விரக்தியாக கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்