- Advertisement -
Homeபொழுதுபோக்கு2025ம் ஆண்டில் திரைக்கு வரும் படங்கள்; இந்த ஆண்டிலாவது தமிழ் சினிமா ஜொலிக்குமா? அந்த 10...

2025ம் ஆண்டில் திரைக்கு வரும் படங்கள்; இந்த ஆண்டிலாவது தமிழ் சினிமா ஜொலிக்குமா? அந்த 10 படங்கள் ரசிகர்களின் கனவை நிறைவேற்றுமா?

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 241 என்று கூறப்படுகிறது. இதில் அஜீத்குமார், சிம்பு ஆகியோர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ரஜினி நடிப்பில் லால் சலாம் வேட்டையன் கமல் நடித்த இந்தியன் 2 விஜய் நடித்த தி கோட் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் தனுஷ் நடித்த ராயன் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா உள்ளிட்ட படங்கள் ஸ்டார் நடிகர் படங்கள் வெளியாகின.

ஆனால் 241 படங்களில் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தவை வெறும் 10 தான். மீதி அதிக கவனம் பெற்ற வரவேற்புக்குரிய படங்களாக இருந்தன. மற்றபடி தமிழ் சினிமாவில் ரூ. 1000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்ட ஆண்டாக 2024ஐ குறிப்பிடுகின்றனர். அது 2025ம் ஆண்டிலாவது மாறுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டில் குறிப்பாக 10 படங்கள் ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற படங்களாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி, மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்த தக்லைப், விஜய் நடித்து வரும் தளபதி 69 படங்கள் கூடுதல் கவனம் பெறுகின்றன.

அதே போல் சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள ரெட்ரோ, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 45வது படம், பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 1965 மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி ஆகிய படங்கள் 2025ம் ஆண்டில் ரிலீஸாகின்றன.

- Advertisement -

மேலும் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் ஆகிய படங்கள் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டில் திரைக்கு வர இருக்கின்றன. கடந்த 2024ம் ஆண்டில் தமிழில் வெளியான 8 படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தன. இதில் விஜய் நடித்த தி கோட் ரூ. 445 கோடி முதலிடம், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ரூ. 325 கோடி இரண்டாமிடம், ரஜினி நடித்த வேட்டையன் ரூ. 265 கோடி மூன்றாமிடம் பிடித்தன.

இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் பெரிய ஸ்டார்களின் இந்த படங்களில் எத்தனை படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கப் போகின்றன, அதிக வசூல் சாதனையில் எந்த படங்கள் முன்னிலை பெறப் போகின்றன, குறிப்பாக ரூ. 1000 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமை தமிழ் படத்துக்கு கிடைக்குமா, தமிழ் ரசிகர்களின் நீண்டகால கனவு நிறைவேறுமா என்ற கேள்விகளுக்கு இந்த படங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

- Advertisement -

சற்று முன்