தமிழ் சினிமாவில் சில நடிகைகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். நடிப்பாலும் அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை தூங்க விடாமல் தவிக்க வைத்த நடிகைகள் என சிலர் இருந்துள்ளனர். அதில் நடிகைகள் ஸ்ரீதேவி நதியா ரேவதி சுகாசினி போன்றவர்களும் உள்ளனர். சில்க் ஸ்மிதா குயிலி அனுராதா போன்றவர்களும் இருந்திருக்கின்றனர்.
நடிப்பால், பூரண அழகால் கவர்ந்த நடிகைகள் ஒரு ரகம் என்றால், அசத்தான கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களின் மனதில் நின்ற சில நடிகைகளும் இருந்திருக்கின்றனர். அந்த ரகத்தை சேர்ந்தவர்தான் நடிகை குஷ்பு. மும்பையில் இருந்து தமிழுக்கு வந்த இவர்தான், கதாநாயகிகளே கவர்ச்சியும் காட்டலாம் என்ற புதிய முறையை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.
அதுவரை படத்தில் நடிக்கும் நாயகிகள், ஓரளவுதான் கவர்ச்சி காட்டினார்கள். ஆனால் குத்தாட்ட பாடல்களிலும், பெட்ரூம் காட்சிகளிலும் அதிக கவர்ச்சி காட்டி குஷ்பு நடித்த பிறகு மீனா ரோஜா ரம்பா நக்மா போன்ற நடிகைகளும் அதே பாணிக்கு மாறிவிட, கவர்ச்சி நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பின்றி போனது.
கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக குஷ்பு வலம் வந்தார். அவருக்கு கோவில் கட்டுவதாக தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு நடிகர் பிரபுவும் குஷ்புவும் திருமணம் செய்துக்கொண்டதாகவும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இயக்குனர் சுந்தர் சியை குஷ்பு திருமணம் செய்துக்கொண்டார். இப்போது தீவிர அரசியலில் குஷ்பு இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, நான் என்னிக்குமே கண்ணகிதானே, இது புதுசு ஒண்ணும் இல்லையே, சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆச்சு, 38 வருஷமா நான் கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கேன் என்று கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
சின்னக்கவுண்டர் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் கவுண்டமணி செந்திலிடம், நீ சொன்ன வாக்கியத்தை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல எழுதி வெச்சுட்டு பக்கத்துலயே நீ உட்கார்ந்துக்க. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதை பார்த்து படிச்சு தெளிவா நடந்துக்குவாங்க, என்று கூறும் வசனக் காட்சியையும், குஷ்பு நான் கண்ணகி என்று சொன்னதையும் இணைத்து போட்டு கலாய்த்து வருகின்றனர்.





