- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... சிம்பு, விக்ரமை வைத்து படங்களை எடுத்த இயக்குனர் அடுத்ததாக மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைகிறாரா......

என்னது… சிம்பு, விக்ரமை வைத்து படங்களை எடுத்த இயக்குனர் அடுத்ததாக மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைகிறாரா… அட நம்பவே முடியலையேப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்படி மூத்த நடிகர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இருக்கிறார்களோ அதே போல், மலையாள உலகில் கொடி கட்டி பறப்பவர்கள் மோகன் லால் மற்றும் மம்முட்டி. இதில் மோகன் லாலை பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசத்தை காட்டும் மோகன்லால், மலையாள திரை உலகில் சக்கரவர்த்தியாக விளங்குகிறார்.

 

- Advertisement -

கேரள திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாக்களிலும் அவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் முக்கியமாக இருவர் திரைப்படத்தை கூறலாம். மணிரத்னம் இயக்கத்தில் அரசியல் பின்புலத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அந்த சமயத்தில் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மோகன்லாலின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

 

- Advertisement -

இதே போல் சிறைவாசல் திரைப்படத்திலும் மோகன்லால் வந்திருந்தார். பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு மோகன் லால், கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தின் நடித்திருந்தார். ஆம் அதுதான் உன்னை போல் ஒருவன். இருவரும் சந்தித்துக் கொள்வது போன்று ஒன்றிரண்டு காட்சிகள் மட்டும் தான் படத்தில் இருக்கும்.

 

ஆனால், அவர்களின் தொலைபேசி உரையாடலே நம்மை விறுவிறுப்பாக அழைத்துச் செல்லும். இதன் பிறகு மோகன்லால் விஜய்யுடன் இணைந்து நடித்த திரைப்படம் ஜில்லா. எப்படி தமிழ் திரை உலகில் பகத் பாசிலுக்கு என ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளம் உள்ளதோ, அதற்கும் பலபடி மேலே கேரள திரையுலகில் விஜய்க்கு என ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஜில்லா திரைப்படம் அங்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

 

ஆனால் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் விஜய் மற்றும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓரளவு சுவாரசியமாகவே எடுக்கப்பட்டிருந்தன. இதன்பிறகு மோகன் லாலை பெரும்பாலும் தமிழ் சினிமாக்களில் பார்க்க முடியவில்லை. இப்படியான சூழலில் தான் அவர் தமிழ் இயக்குனர் ஒருவருடன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

அவர் வேறு யாரும் அல்ல விஜய் சந்தர்தான். சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்து பின்னர் வெளியாகிய வாலு திரைப்படம் தான் விஜய் சந்தருக்கு முதல் படம். பிறகு விக்ரமை வைத்து ஸ்கெட்ச் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து சங்கத்தமிழன் ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். இப்படியான சூழலில் தான் அவர் மோகன்லாலிடம் ஒரு கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்