தமன்னா தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் டிரெண்டிங் நடிகையாக வலம் வருகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் “ஜெயிலர்” படத்தில் இடம்பெற்ற “காவாலயா” பாடல் ஒன்றுதான். பல ஆண்டுகளுக்கு முன்பு தமன்னாவின் மார்க்கெட் தென்னிந்திய சினிமாவில் ஏகபோகமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தமன்னாவின் மார்க்கெட் சரிந்துப்போனது. ஹிந்தியில் கூட சில திரைப்படங்கள் நடித்தார். ஆனாலும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில்தான் ஹிந்தியில் “லஸ்ட் ஸ்டோரீஸ்” போன்ற வெப் சீரீஸில் கவர்ச்சி புயலாக களமிறங்கினார். மீண்டும் இளைஞர்களின் மனதில் தீயை பற்றவைத்தார் தமன்னா. அதனை தொடர்ந்து “ஜெயிலர்” படத்தில் “காவாலயா” பாடலில் அசரவைக்கும் படி நடனமாடி பார்வையாளர்களை சொக்க வைத்துவிட்டார். இவ்வாறு தமன்னா மீண்டும் தனது ஃபார்முக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.
இந்த நிலையில் நடிகை தமன்னா, சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சுறா படம் ஓடாது என்று அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது. அந்த படம் சரியாக வரவில்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. அந்த படத்தில் நடித்ததுதான் நான் செய்த மிக பெரிய தவறு. அந்த படம் நிச்சயம் தோல்வி அடையும் என்று தெரிந்தேதான் வேறு வழியில்லாமல் அதில் நடித்துக்கொடுத்தேன். ஒரு படத்தில் கமிட்டாகி விட்டால் அதனை முடித்துக்கொடுக்க வேண்டும்.

அதுதான் நடிகர்களின் கடமை. எனவே அந்த படத்தில் நடித்துக்கொடுத்தேன். இனி அது போன்ற படங்களில் நடித்து உங்களை டார்ச்சர் செய்யமாட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





