காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்தவர் மணிகண்டன். ரசிகர்களின் கவனம் பெற்ற மணிகண்டன் தொடர்ந்து ஜெய்பீம் குட்நைட் லவ்வர் போன்ற படங்களில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகி உள்ள குடும்பஸ்தன் படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பொருளாதார சிரமங்களில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி உருவாக்கி இருக்கிறார். இதில் நவீன் கேரக்டரில் மணிகண்டன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்நைட் லவ்வர் படங்களை தொடர்ந்து குடும்பஸ்தன் படமும் ஹாட்ரிக் வெற்றியை மணிகண்டனுக்கு தந்திருக்கிறது.
சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் கூறுகையில், நான் இயக்க விரும்புகிற நடிகர்களில் நடிகர் மணிகண்டனும் ஒருவர் என்று பாராட்டி பேசியிருக்கிறார். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள ஒரு நடிகராக மணிகண்டன் வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டப்பிங் ரைட்டர் ஸ்கிரிப்ட் ரைட்டர் உதவி இயக்குனர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல நிலைகளை கடந்து இன்று நடிகர் மணிகண்டன் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். நிச்சயமாக அவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தன்னிடம் ஒரு மோசமான கெட்ட பழக்கம் இருப்பது குறித்து அவரே சமீபத்தில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் மணிகண்டன் கூறியதாவது, ஓவர் திங்கிங். என்னிடம் இருக்கிற மிகப்பெரிய கெட்ட பழக்கம் அதுதான். அது எனக்கு சாதாரணமாக எல்லாம் இருக்காது. என்னை அரஸ்ட் பண்ணி ஜெயிலில் போட்டு தூக்கில் போடுவது வரைக்கும் நான் போயிடுவேன். அது காலணாவுக்கு பிரயோசனமே இல்லாத விஷயமாக இருக்கும் அது. அவ்வளவுதான் போச்சு லைப் காலி என்ற அளவுக்கு போயிடும்.
என்னை யாரும் ஹர்ட் பண்ண மாட்டாங்க, என்னை யாரும் எதுவுமே பேச மாட்டாங்க. என்னை யாரும் வருத்தமா பார்க்க மாட்டாங்க. ஆனால் நான் மட்டும் தொடர்ந்து ஓவர் திங்கிங் பண்ணிக்கிட்டே இருப்பேன் என்று மணிகண்டன் கூறியிருக்கிறார். கட்டுபாடு இல்லாத சிந்தனை பழக்கம் தனக்கு இருப்பதாக நடிகர் மணிகண்டன் கூறியிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.





