தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கடந்த 1976ம் ஆண்டில் பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக மீனா பல படங்களில் நடித்தார். அப்போது அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படம் 1984ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் நடித்த போது குழந்தை நட்சத்திரம் மீனாவின் வயது 8. அப்போது அந்த படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்தின் வயது 34 என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு 1993ம் ஆண்டில் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் எஜமான் படத்தில் நடித்த போது அவரது வயது 43 என்ற நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்தார். அப்போது மீனாவின் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
8 வயது சிறுமியாக இருந்த மீனாவுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த ரஜினிகாந்த், வளர்ந்த அதே பெண்ணுடன் ஜோடியாக நடித்திருக்காரே என்ற கடுமையான விமர்சனம் அப்போது பலமாக எழுந்தது. ஆனால் அதையும் கடந்து எஜமான் படம் பெரிய வெற்றியை பெற்றது.
இப்போது அதைப் போன்ற இந்த வயது வித்யாசம் விமர்சனம் நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சேது படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விக்ரம். இந்த படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது பண்ணையாரும் பத்மினியும் சித்தா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் என்ற படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். வருகிற 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் கடந்த 1966ம் ஆண்டில் பிறந்தவர் என்ற நிலையில் அவரது தற்போதைய வயது 59 வயதாக உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள துஷாரா விஜயன் வயது 27 ஆக உள்ளது. விக்ரமின் மகன் நடிகர் துருவ் விக்ரம் வயதும் 27 தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1977ம் ஆண்டில் பிறந்த தனது மகன் வயதுள்ள நடிகைக்கு, 32 வயது அதிகமான நடிகர் விக்ரம் ஜோடியாக நடித்திருப்பது இப்போது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.





