- Advertisement -
Homeபொழுதுபோக்குமன்னிப்பு கேட்க மறுத்த நடிகர் கமல், வருத்தப்படுவதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் -...

மன்னிப்பு கேட்க மறுத்த நடிகர் கமல், வருத்தப்படுவதாக கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் – தவறான புரிதல் தற்காலிகம்தான் எனவும் விளக்கம்!

- Advertisement -

கடந்த வாரத்தில் நடந்த தக்லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும் போது, தமிழ் மொழியில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்ற கருத்தை பேசியிருந்தார். இது பெரிய அளவில் வைரலானது. கர்நாடகாவில் இது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கன்னட அமைப்புகள் கமலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்று மதியம் 12 மணி வரை கால அவகாசம் தந்த கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை கமல் நடித்த தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதித்தது. கமல் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் இப்போது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் ஒரு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த கடிதத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அன்பின் மிகுதியால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கன்னட மொழியை ஒருபோதும் நான் குறைத்து மதிப்பிடவில்லை.

தமிழைப் போலவே கன்னடமும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்டது. அதை நான் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறேன். எனக்கு மொழிகள் மீது நிறைய அன்பு உண்டு. எனக்கு மொழிகள் உடனான பிணைப்பு ஆழமானது. எந்த மொழியையும் தாழ்த்தி பார்க்கும் எண்ணம் இல்லை.

- Advertisement -

எனது பேச்சு அனைவரையும் ஒருங்கிணைக்கவும் அன்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டவும் மட்டுமே இருந்தது. திரைப்படம் மக்களிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது. இதுவே எனது பேச்சில் உண்மையான நோக்கம். பொது அமைதியின்மை இல்லை மற்றும் பகைமைக்கு எந்த இடத்தையும் நான் ஒருபோதும் அளிக்க விரும்பவில்லை.

இந்த தவறான புரிதல் தற்காலிகமானது. நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று என்று கமல் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். எனினும் இதுகுறித்து கோர்ட் வழக்கில் தக்லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது என்பதை கோர்ட் உறுதிப்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்