தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மதுபாலா. ரோஜா ஜென்டில்மேன் அழகன் பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல மொழிப் படங்களிலும் மதுபாலா நடித்திருந்தார்.
பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்த மதுபாலா, திடீரென திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அமையா, கியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகும் இடையில் சில படங்களில் நடித்த மதுபாலா, பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பதில் நடிகை மதுபாலா தீவிர ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இந்தி தெலுங்கு என பல படங்களில் மதுபாலா பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி உள்ள கண்ணப்பா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை மதுபாலா நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் நடிகை மதுபாலா பங்கேற்றார். அப்போது நடிகை மதுபாலா கூறியதாவது, சினிமாவில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருக்கும்.
அதனால் நான் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன். ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் முத்தக்காட்சியில் நடிக்க சொன்னார்கள். அதுவும் உதட்டு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு என்னிடம் அதிக நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த காட்சியில் நடித்தது எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது என்று அந்த நேர்காணலில் நடிகை மதுபாலா கூறி இருக்கிறார். வழக்கமாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் உதட்டு முத்தக்காட்சிகளில் நாயகிகள் நடிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகவே இருந்த வருகிறது. தமிழ் சினிமாவில் அதை இயக்குனர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் இந்தி தெலுங்கில் அது கட்டாயமாகி விட்டதால் பல தமிழ் நடிகைகளுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.





