தமிழ் சினிமாவில் நடிகராக பாடகராக தயாரிப்பாளராக இயக்குனராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கடந்த ஆண்டில் அவர் நடித்து இயக்கிய ராயன் படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இது அவரது 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது தனுஷ் நடிப்பில் குபேரா படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
பிச்சைக்காரனாக உள்ள கதாநாயகன், திடீர் பணக்காரனாகி குபேரானாக மாறுவதுதான் படத்தின் கதை. நேற்று முதல் நாளில் இந்த படம் ரூ. 25 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களாக குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ஆவேசமாக பேசியது வைரலாகி உள்ளது. அதிகமாக ட்ரோல் செய்தும் கலாய்க்கப்படுகிறது.
வழக்கமாக தனுஷ் இதுபோல் பேசுபவர் இல்லையே என ரசிகர்கள் தரப்பில் ஆச்சரியப்பட்டாலும், இதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது நடிகர் தனுஷ் தனது முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் போல, நடிகர் விஜய் போல இனி தனது மேடை நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.
அதாவது ரஜினிகாந்த் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே அங்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ரஜினி சொல்கிற ஆன்மிக தத்துவங்கள், குட்டி கதைகள், தனது அனுபவங்கள் என பல நேரங்களில் ரஜினியின் பேச்சு பல நாட்களுக்கு இணையத்தில் வைரலாகும். அதே போல் விஜயின் பேச்சுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். அவரது வீடியோவும் டிரண்டிங் ஆகி விடும்.
அதனால்தான் குபேரா பட விழாவில் நடிகர் தனுஷ் அப்படி ஒரு தெனாவெட்டான பேச்சை அரங்கேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இதுவும் ஒரு விளம்பர யுக்திதான். படத்துக்கு பிரமோசன் தேடும் விஷயம்தான். ஆனால் நல்ல படம் என்றால் தானாக ஓடும். தனுஷூக்கு இது வேண்டாத வேலை. ரஜினி விஜய் அளவுக்கு எல்லாம் தனுஷ் தன்னை நினைத்தால் அதுதான் பயங்கர காமெடி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





