- Advertisement -
Homeபொழுதுபோக்குபூவே உனக்காக, அருவி சீரியல்களை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் நடிகை ஜோவிதா - அட இவங்க...

பூவே உனக்காக, அருவி சீரியல்களை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் நடிகை ஜோவிதா – அட இவங்க அப்பா பெரிய நடிகராச்சே? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

வாரிசு அரசியலைப் போலவே வாரிசு சினிமாவும் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள்தான் முன்னணி நடிகர்களாக இருக்க முடியும். இதைமீறி வெளியில் இருந்து வரும் நடிகர்கள் முன்னணி நடிகராக முடியாது. அங்குள்ள பாரம்பரிய சினிமா மரபு அவர்களை அனுமதிக்காது.

அப்படித்தான் இந்தியில் சிறந்த நடிகராக உருவாக இருந்த நடிகர் கமலஹாசனை இந்தி பட உலகம் ஒரு காலகட்டத்தில் நிராகரித்தது. இப்போதும் இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகளுக்குதான் வாய்ப்பும் முக்கியத்துவமும் அதிகம். அதே போல் தெலுங்கு சினிமாவிலும் இதே நிலை நீடிக்கிறது.

- Advertisement -

ஆனால் தமிழ் சினிமாவிலும் இப்படி வாரிசு நடிகர்கள், நடிகைகள் அதிகமாக வந்தாலும் அது அவர்களது திறமையை பொறுத்தே வெற்றி என்பது அமைகிறது. பெரிய நடிகரின் மகனாக, மகளாக இருந்தாலும் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்தால் மட்டுமே அவரால் சினிமாவில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் வெகு சீக்கிரத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார்.

அதே நேரத்தில் சினிமா சாராத ஒருவர் சினிமாவுக்குள் வந்து ஜெயிக்கும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் தாராளமாக இருக்கிறது. திறமை உள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலையில் தமிழ் சினிமாவின் வாசல் எப்போதுமே திறந்து இருக்கிறது. அதனால்தான் சினிமா பின்புலமே இல்லாத நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் முதல் தற்போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் சூரி வரை பலரும் தமிழ் சினிமாவில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா. சின்னத்திரையில் பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அருவி என்ற தொடரில் நடித்த ஜோவிதாவுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் புகழும் கிடைத்தது. இதையடுத்து ஜோவிதா ஜீ தமிழ் சேனலில் இன்று (நவம்பர் 4) முதல் ஒளிபரப்பாக உள்ள மௌனம் பேசியதே தொடரிலும் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இதற்கிடையே ஜோவிதா சினிமாவிலும் விரைவில் அறிமுகம் ஆகிறார். அந்த படத்திற்கு அவரது தந்தை லிவிங்ஸ்டன்தான் கதாசிரியர்.

இதுகுறித்து நடிகர் லிவிங்ஸ்டன் கூறுகையில், நாடகங்கள் தான் திரைப்படத்தின் முன்னோடி. அதனால்தான் எனது மகளை சீரியலில் நடிக்க வைத்து நடிப்பு அனுபவம் பெற வைத்தேன். இப்போது அவர் நடிப்பில் தேறிவிட்டதால் சினிமாவில் களம் இறங்குகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் ஜோவிதா அறிமுகமாக உள்ள இந்த படத்தின் கதையை 3 ஆண்டுகளாக உருவாக்கியதாகவும், தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதைகளமாக இந்த படம் இருக்கும் என்றும் லிவிங்ஸ்டன் உறுதியளித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்