- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு போட்ட திடீர்...

ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு போட்ட திடீர் உத்தரவு – பராசக்தி படம் ரிலீஸ்க்கு வந்த திடீர் சிக்கல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. பல படங்களை அந்த நிறுவனமே சொந்தமாகவும் தயாரித்தும் வெளியிடுகிறது. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின். இப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருக்கிறார்.

ஆரம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் பல படங்களை தயாரித்தது மட்டுமின்றி படங்களில் நாயகனாகவும் நடித்து இருக்கிறார். குறிப்பாக ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா நெஞ்சுக்கு நீதி மனிதன் மாமன்னன் சைக்கோ கலகத் தலைவன் இது கதிர்வேலன் காதல் கெத்து நண்பேன்டா சரவணன் இருக்க பயமேன் பொதுவாக எம்மனசு தங்கம் என பல படங்களில் உதயநிதி நடித்திருக்கிறார்.

- Advertisement -

திமுகவின் இளைஞரணி மாநில செயலாளர் பொறுப்புக்கு வந்த பின் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆனார். பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராக பணி செய்தார். அதன்பிறகு கட்சி பொறுப்புகள், அரசியல் பணிகளில் முதல்வர் ஸ்டாலினுக்கு உதவும் விதமாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக, ஆட்சியிலும் கட்சி பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் வழக்கம்போல ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிப்பு, படங்கள் வினியோகம் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி
வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தனது மகன் உதயநிதியை அழைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் முடியும் வரை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் படங்கள் தயாரிப்பு, வினியோகம் எல்லாம் நிறுத்தி வையுங்கள், என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த ஒருமுறை நடந்த சட்டசபை தேர்தலின் போது, தமிழ்சினிமா மொத்தமும் திமுக கைவசம் இருப்பதாக புகார் எழுந்தது. அந்த நேரத்தில் திமுக தேர்தல் தோல்வியை சந்தித்தது. இந்த முறை அந்த புகார் வரக்கூடாது என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் கூலி படம்தான் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் கடைசி படமாக இருக்கும். அதனால் இப்போது பராசக்தி படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுமா என்ற சிக்கலும் கேள்வியும் எழுந்துள்ளது, என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்