- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த மனசு எல்லாருக்குமே வரணுமே சார்…? - கொடுத்த வாக்கை தனது பிறந்த நாளில் நிறைவேற்றிக்...

இந்த மனசு எல்லாருக்குமே வரணுமே சார்…? – கொடுத்த வாக்கை தனது பிறந்த நாளில் நிறைவேற்றிக் காட்டிய நடிகர் கேபிஒய் பாலா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உதவும் மனம் கொண்டவர்களாக வாழ்ந்தவர்கள் மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் நடிகர் மயில்சாமி போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் மனம் கொண்ட மனிதராக மாஸ்வர் ராகவா லரான்ஸ் இருந்து வருகிறார். அதே போல் இளம்நடிகர் கேபிஒய் பாலாவும் பல உதவிகளை செய்து வருகிறார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. அதனால் கேபிஒய் பாலா என்றே அழைக்கப்படுகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றார். வளர்ந்து வரும் இளம் நடிகராக பாலா சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது காந்தி கண்ணாடி என்ற படத்தில் அவர் நாயகனாக நடிக்கிறார்.

- Advertisement -

கஷ்டப்படும் மக்களுக்கு தேடிச் சென்று உதவும் கேபிஒய் பாலாவை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை தனது சொந்த பணத்தில் கேபிஒய் பாலா வாங்கி கொடுத்து உதவினார்.
அடுத்து ஏழை விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வாங்கித் தந்தார்.

கடந்தாண்டில் சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த பணத்தில் 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்து அவர்களுக்கு உதவினார். இப்படி தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு எல்லாம் உதவும் குணம் கொண்டவராக நடிகர் கேபிஒய் பாலா இருந்து வருகிறார். யார் என்ன உதவி கேட்டாலும் தன்னால் அது முடியும் என்றால் அதை அவர் செய்து விடுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் மனதை நெகிழ வைக்கும் ஒரு உதவியை கேபிஒய் பாலா சமீபத்தில் செய்திருக்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் பிரச்னை ஏற்பட்ட ஒரு சிறுமியை நேரில் சென்று சந்தித்து, கேபிஐ பாலா உதவி செய்திருக்கிறார். அப்போது அந்த சிறுமி ஒரு பாழடைந்த வீட்டில் இருந்திருக்கிறார்.

அந்த சிறுமியின் பரிதாபமான நிலையை பார்த்து வருத்தப்பட்ட கேபிஒய் பாலா, விரைவில் உனக்கு நான் புது வீடு கட்டித் தருகிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். 2 மாதங்களில் அந்த சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் செலவில் ஒரு புது வீட்டை கேபிஒய் பாலா கட்டிக் கொடுத்திருக்கிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அந்த புதிய வீட்டை அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அவர் வழங்கியிருக்கிறார். பிறந்த நாளில் தனது வாக்கை காப்பாற்றிய கேபிஒய் பாலாவை பலரும் பாராட்டியுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்