- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டரில் நடிப்பதில் தவறே இல்லை… அது நடந்தால் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் -...

அந்த கேரக்டரில் நடிப்பதில் தவறே இல்லை… அது நடந்தால் எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் – வெளிப்படையாக பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ரம்மி பண்ணையாரும் பத்மினியும் திருடன் போலீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அடுத்து இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் 2 பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த கேரக்டரில் அவர் அப்படியே வாழ்ந்திருந்தார். காக்கா முட்டை படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. யதார்த்தமான ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருந்தது.

- Advertisement -

தொடர்ந்து ஆறாது சினம் ஹலோ நான் பேய் பேசறேன் மனிதன் குற்றமே தண்டனை தர்மதுரை சாமி 2 வடசென்னை ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் செக்கச் சிவந்த வானம் நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் டிரைவர் ஜமுனா திட்டம் 2 போன்ற படங்களில் கதையின் நாயகியாகவும் அவர் நடித்திருந்தார்.

இதில் தி கிரேட் இண்டியன் கிச்சன் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் இருந்து தமிழில் உருவான இந்த படத்தில் சமையலறையில் சிக்கி விடும் இல்லத்தரசிகள், என்ன மாதிரியான துன்பங்களை சிக்கல்களை சந்திக்கின்றனர் என்பதை அழகாக அழுத்தமாக காட்டியிருந்தனர்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை பெருமையாக கருதுகிறேன். எனது சினிமா கேரியரில் இளம் வயதில் அதிக அளவிலான அம்மா கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். ஒரு நடிகையாக இருப்பவர் எல்லாவிதமான ரோல்களிலும் நடிக்க வேண்டும்.

அப்படி நடிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. சங்கராந்திகி வஸ்துண்ணம் படத்தில் 4 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன். அடுத்து இந்த படத்தின் 2ம் பாகம் எடுத்தால் அது எனக்கு 6 குழந்தைகள் இருக்கும் என்று இயக்குனர் அணில்ரவிபுடி என்னிடம் கூறியிருக்கிறார் என்று அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்