கடந்த 2007ம் ஆண்டில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். முதல் படமே பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த படத்தில் ஜீவா அஞ்சலி நடித்திருந்தனர். இதுதான் நடிகை அஞ்சலி அறிமுகமான முதல் படமாகும். தொடர்ந்து தங்க மீன்கள் பேரன்பு தரமணி உள்ளிட்ட படங்களை தந்தார்.
இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ராம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். சவரக்கத்தி என்ற படத்தில் சலூன் கடை நடத்தும் பார்பர் கேரக்டரில் ராம் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. இதில் மிஷ்கின் வில்லனாக காமெடி நடிப்பில் அசத்தியிருந்தார். தங்க மீன்கள் படத்திலும் ராம்தான் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டில் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் தங்கமீன்கள் படம் வெளியானது. இதில் ஹீரோவாக மம்முட்டி நடித்திருந்தார். சர்வதேச திரைப்பட விழா, குழந்தைகள் சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படம் திரையிடப்பட்டது. இந்த படம் 3 தேசிய விருதுகளை பெற்றது.
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழுகடல் ஏழுமலை என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருந்து வருகிறது. அதற்கு முன்பாக ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ என்ற படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் கூறியிருப்பதாவது, இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு மழை ஏறுங்கள் அல்லது ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள் அல்லது அவர்களை ராம்சாரின் பறந்து படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.
வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று. ராம் சார் நீங்கள் பெஸ்ட் இயக்குனர். சிவா கிரேஸ் ஆன்டனி அஞ்சலி என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகை நயன்தாரா பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





