- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை நடிகர் வடிவேலு கம்பேக் உறுதியா? மாரீசன் டிரெய்லர் வெளியீடு - கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக...

இந்த முறை நடிகர் வடிவேலு கம்பேக் உறுதியா? மாரீசன் டிரெய்லர் வெளியீடு – கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக வெளுத்து வாங்கிய வைகைப்புயல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு கடந்த 1990 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிஸியான ஒரு காமெடி நடிகராக வலம் வந்தார். ஒரு நாளைக்கு ரூ. 12 லட்சம் வரை சம்பளம் வாங்கும் பரபரப்பான நடிகராகவும் இருந்தார்.

ஆனால் கேப்டன் விஜயகாந்துடன் ஏற்பட்ட பிரச்னை, இயக்குனர் ஷங்கருடன் தகராறு என சில விவகாரங்களால் வடிவேலு 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பிறகு நடிகர் விஷால் நடித்த கத்தி சண்ட படம் மூலம் டாக்டர் பூத்ரி என்ற கேரக்டரில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து சிவலிங்கா சந்திரமுகி 2 நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் கேங்கர்ஸ் என பல படங்களில் நடித்தார். ஆனால் பழைய வடிவேலுவை அந்த காமெடி ரியாக்சனை பார்க்க முடியவில்லை. பழைய வடிவேலுவாக அவரது நடிப்பும் உடல் மொழியும் டயலாக் டெலிவரியும் இல்லை என்று ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

அதே நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படத்தில் வடிவேலு குணச்சித்திர நடிப்பில் வேற லெவலில் ஒரு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதுபோன்ற கேரக்டர்களில் வடிவேலு நடித்தால் நிச்சயமாக மீண்டும் பழைய இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் பலரும் விமர்சித்தனர்.

- Advertisement -

இப்போது அதுபோன்ற ஒரு அழுத்தமான கேரக்டரில் நடிகர் வடிவேலு மாரீசன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பகத் பாசில் நடித்திருக்கிறார். ஞாபக மறதி நோய் பாதிப்புள்ள வடிவேலு, திருநெல்வேலி முதல் திருவண்ணாமலை வரை பைக்கில் பயணிப்பதுதான் படத்தின் கதை. அவரிடம் இருக்கும் பெருந்தொகை பணத்தை அபகரிக்க திட்டமிடும் பகத் பாசிலின் முயற்சிகள்தான் மாரீசன் படத்தின் கதை.

இந்த படம் வருகிற 25ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் மாரீசன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வடிவேலு பகத் பாசில் இருவரும் நடித்த காட்சிகள் மற்றும் கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். டிரெய்லரை பார்க்கும்போதே நிச்சயமாக இது வடிவேலுவுக்கு சூப்பர் கம்பேக் தரும் படமாக அமையும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு தந்துள்ளது.

மாரீசன் படத்தின் டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்யவும்;https://www.youtube.com/embed/a8zKHSKHThY?si=iTUTNb7NA5Iz5uZ5

- Advertisement -

சற்று முன்