இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படமானது இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இவ்வேளையில் திட்டமிட்டபடி இன்று படம் வெளியாகிய வேளையில் ரசிகர்கள் இந்தப் படத்தை திருவிழா போல கோலாகலமாக வரவேற்றுள்ளனர்.

குறிப்பாக தமிழகம் முழுவதும் இன்று ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படமானது உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள வேளையில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் நாளிலேயே கிட்டத்தட்ட இந்த படத்தினை மாபெரும் வெற்றிப்படம் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Of course I love Rajni sir….Maassss!! He had come on Jawan set and blessed us too. #Jawan https://t.co/cKaqMlR8c4
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
இந்நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த வேளையில் : “ஜெயிலர்” திரைப்படத்தை பார்ப்பீர்களா? என்று ரசிக எழுப்பிய ஒரு கேள்விக்கு மிகவும் மாஸான ரிப்ளை ஒன்றினை கொடுத்துள்ளார். அதன்படி ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கான் :
நிச்சயமாக ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பேன். “ஐ லவ் ரஜினி சார்” “அவர் எப்பவுமே மாஸ்” எங்கள் ஜவான் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு கூட அவர் நேரில் வந்து எங்களை ஆசீர்வதித்து சென்றார் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஷாருக்கானும் ரஜினி ரசிகர் தான் என்பதும் அவர் நிச்சயம் இந்த படத்தை பார்ப்பார் என்பது உறுதியாகியுள்ளது.





