கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கிச்சா சுதீப். அவரது ஒரிஜினல் பெயர் சுதீப் தான். ஆனால் கிச்சா சுதீப் என்று தான் ரசிகர்கள் அவரை அழைக்கின்றனர். நான் ஈ என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் சுதீப் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாகுபலி படத்திலும் சுதீப் நடித்திருந்தார். அதேபோல் நடிகர் விஜய் நடித்த புலி படத்திலும் சுதீப் தான் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் 12வது படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. சின்ன வயதில் இருந்தே எனக்கு படம் பார்ப்பது ரொம்பவும் பிடிக்கும். சினிமா இல்லாவிட்டால் கிரிக்கெட் பிளேயராக வர வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது.
ஆனால் எங்க அப்பா ரொம்பவும் கண்டிப்பானவராக இருந்தார். இன்ஜினியரிங் காலேஜில் என்னை சேர்த்து விட்டார். அப்பா கிட்ட சினிமாவில் நடிக்கணும் என்று சொல்கிறேன். நான் நடித்த முதல் மூன்று படங்களுமே பிளாப் ஆயிடுச்சு. சரி சினிமாவுல நடிப்பு நமக்கு சரியா வரவில்லை. அதனால் டிவி சீரியல் பக்கம் போனேன். அங்கே துணை நடிகர் கதாபாத்திரம்தான் கிடைத்தது.
இதையாவது நல்லா பண்ணனும் என்று டிவி சீரியலில் நடிக்க தொடங்கி விட்டேன். அந்த டைம்ல தான் தமிழில் ஒரு படம் பயங்கரமா தியேட்டரில் ஓடீட்டு இருந்தது. ஆனா அந்த படம் பயங்கர சிக்கலில் தியேட்டரில் இரண்டு முறை வெளியாகி அதுக்கப்புறம் தான் பிக்கப் ஆனது. நான் அந்த படத்தை பார்த்ததும் இந்த படத்தோட கன்னடம் ரீமேக் ல நான் நடிக்க கூடாதான்னு நினைத்தேன்.
அந்த படம் தான் விக்ரம் சார் நடித்த சேது படம். தமிழில் எப்படி விக்ரம் சாருக்கு சியான் பெயரை வாங்கி கொடுத்ததோ, அதே மாதிரி கன்னடத்தில் எனக்கு கிச்சா சுதீப் என்ற பெயர் வாங்கி கொடுத்தது. இப்ப வரைக்கும் கிச்சா என்ற பெயர் எனக்கு மறக்க முடியாத வாழ்க்கையாக உள்ளது. கிச்சா படத்தில் நடிக்கும் போது எனக்கு கால் முறிவு ஏற்பட்டது. அந்த வலியோடு தான் கிச்சா படத்தில் நடித்தேன்.
அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன். யாருமே இல்லை. தியேட்டர் மேனேஜர் என்னை பார்த்து, வாழ்த்துகள் சார் சொன்னார். அப்போ நான் நம்பவில்லை. ஒரு ரசிகர் நான் நடந்து வர்றதை பார்த்ததும் என் பெயரை மறந்து, நீதானே கிச்சா என்று சொல்லி என்னை கொண்டாடினார்கள். அப்போ உச்சத்துக்கு போனதுதான். இப்ப வரைக்கும் நடிகரா என் பயணம் தொடர்கிறது என்று நடிகர் கிச்சா சுதீப் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.





