- Advertisement -
Homeபொழுதுபோக்குஅன்னிக்கு நைட் முழுக்க தூங்கலே, அம்மாவுக்கு இருக்கும் உணர்வில் நான் இருந்தேன் - நெகிழ்ச்சியாக பேசிய...

அன்னிக்கு நைட் முழுக்க தூங்கலே, அம்மாவுக்கு இருக்கும் உணர்வில் நான் இருந்தேன் – நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். குறுகிய காலத்தில் நல்ல கதைகள் நல்ல இயக்குனர்கள் நல்ல கேரக்டர்கள் என தேர்வு செய்து நடித்து இன்று ஒரு முன்னணி நடிகராக தனது இமேஜை கொண்டு வந்திருக்கிறார். கடும் உழைப்பும் தீவிர முயற்சியும் திறமையும் அவரது இந்த அபார வெற்றிக்கு காரணமாக உள்ளது.

கடந்தாண்டில் வெளியான அமரன் படத்தின் அபாரமான வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ. 70 கோடியாக உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன், இப்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகர் அதர்வா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே வருகிற செப்டம்பர் 5ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வெளியாக உள்ளது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் வில்லன் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரடக்சன்ஸ் அதாவது எஸ்கே புரடக்சன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் அவர் நடிக்கும் சில படங்கள் மற்றும் பிற ஹீரோக்களின் படங்களையும் அவர் தயாரித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் நடந்த ரவிமோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் துவக்க விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, ஒரு தயாரிப்பாளராக கிடைக்கும் மகிழ்ச்சி நான் நடிக்கும் படங்கள் கூட எனக்கு தருவதில்லை. தயாரிப்பாளராக நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். அது நான் நடிக்கும் படங்களில் கிடைக்காது.

நான் அடுத்து தயாரித்துள்ள படத்தை பார்த்தபோது அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. அம்மாவிற்கு இருக்கும் அதே உணர்வு தயாரிப்பாளராக ஒரு படத்தை எடுக்கும் போதும் இருக்கும். அதை நான் அனுபவித்து இருக்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்