- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஆசை எல்லாம் எனக்கு இல்லே… அதனால் நான் அதிக படங்களில் நடிக்கலே.… - நடிகர்...

அந்த ஆசை எல்லாம் எனக்கு இல்லே… அதனால் நான் அதிக படங்களில் நடிக்கலே.… – நடிகர் ரஞ்சித் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கேரக்டர்களில் நடித்தவர் நடிகர் ரஞ்சித். பொன்விலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ரஞ்சித் பாரதி கண்ணம்மா சபாஷ் பாண்டவர் பூமி பீஷ்மர் என்னம்மா கண்ணு நேசம்புதுசு மறுமலர்ச்சி சிந்துநதிப்பூ பசுபதி மே/பா ராசக்காபாளையம் நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் கடந்த 2024ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். மேலும் அவரது இயக்கத்தில் நாடக காதல் என்ற கதைக்களத்தில் வெளியான கவுண்டம்பாளையம் படமும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இப்போது பாஜக ஆதரவாக உள்ள நடிகர் ரஞ்சித் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் விஜயை கடுமையான விமர்சனம் செய்ததும் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

நடிகர் ரஞ்சித் நடிப்பில் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறுதி முயற்சி. வருகிற 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த பட விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் ரஞ்சித் பேசியதாவது, சென்னையில் சாலிகிராமம் வடபழனி கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் பயணித்த போதும், இப்போது பயணிக்கும் போதும் மனம் கனத்து விடுகிறது.

ஏனெனில் சினிமாவில் என்றைக்காவது சாதித்து விடலாம் என்ற கனவில் தங்களது வாழ்வை தொலைத்துவிட்டு அலைபவர்கள் அதிகம். நான் எப்போதும் வாய்ப்புகளை தேடி அலைந்தது இல்லை. ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பொன்விலங்கு படத்தில் நடிக்க தேர்வானேன். இதற்காக அவரை சந்தித்து நடிகராக தேர்வாகும் வரை எனக்குள் பெரும் பதற்றம் இருந்தது.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் எல்லாம் கதைக்கு பொருத்தமான முகங்களை தான் இயக்குனர்கள் தேர்வு செய்தார்கள். அந்த வகையில் ஆர்கே செல்வமணி கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் ஹீரோவாக தேர்வானேன். இதற்கு ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வத்தின் விருப்பமும் சம்மதமும் முதன்மையாக இருந்தது. நான் சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என்று தான் வந்தேன்.

சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றால் வீடு வாங்கிவிடலாம், கோடிக்கணக்கு சம்பளம் வாங்கிவிடலாம் என்று நினைத்து சினிமாவுக்குள் வரவில்லை. நல்ல சினிமாவிற்காக தான் என்னுடைய கவனம் செல்லும். அதனால் தான் நான் நிறைய சினிமாக்களில் நடிப்பதில்லை. சினிமாவை நேசித்தால்தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். சினிமா என்பது ஏனைய தொழிலை போல் அல்ல, இந்த தொழிலை சுவாசித்தால்தான் இந்த தொழிலில் இருக்க முடியும் என்று நடிகர் ரஞ்சித் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்