- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயின் மேக்கப் கரூரில் கலைந்து போய்விட்டது… ரஜினியை போல விஜயும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார்...

விஜயின் மேக்கப் கரூரில் கலைந்து போய்விட்டது… ரஜினியை போல விஜயும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் – பிரபல நடிகர் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் எஸ்வி சேகர். கடந்த 1980 90களில் ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக தனது நெருங்கிய நண்பர் விசு இயக்கிய பல படங்களில் எஸ்வி சேகர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.

மேலும் நாடகப்பிரியா என்ற நாடக அமைப்பை நடத்தி வரும் எஸ்வி சேகர் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை அரங்கேற்றமும் செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்து வரும் எஸ்வி சேகர் சமீபகாலமாக திமுக ஆதரவாகவும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராகவும் விமர்சனம் செய்து தொடர்ந்து பேசி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ்வி சேகர் கூறியதாவது, என்னுடைய வீட்டிற்கு கடந்த மூன்று நாட்களில் ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசார் அக்கறையுடன் ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அதற்காக போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளேன்.

கரூரில் 7 மணி நேரம் கடந்து விஜய் தாமதமாக வந்தது மாபெரும் தவறு. சினிமா நடிகன் பின்னால் செல்லாதீர்கள். சினிமா நடிகன் வெறும் பொம்மை. திரையில் வருவதைப் பார்த்து ஏன் நம்புகிறீர்கள்? விஜயின் மேக்கப் கரூரில் கலைந்து போய்விட்டது. இது போன்ற பிரச்னைகள் எல்லாம் வரும் என்று தெரிந்து தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் சத்தம் இல்லாமல் விலகிப் போய்விட்டார்.

- Advertisement -

அவர் பார்ப்பதற்கு தண்ணீர் தெளிவாக இருக்கும். உள்ளே காலை விட்டால் தான் முதலை இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். கரூரில் 26 ஆயிரம் பேர் வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியாத விஜய் 10 கோடி மக்கள் இருக்கிற தமிழ்நாட்டை கட்டுப்படுத்தி விடுவாரா? விஜய் எனக்கு விரோதி கிடையாது.

விஜய் அவரது தந்தையை மதிக்காமல் புஸ்லி ஆனந்தை மதித்ததால் வந்த கோளாறு தான் இது. கரூர் விவகாரத்தில் விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரை இன்னும் பெரிய ஆளாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்காது. ரஜினிகாந்த் போன்று விஜயும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்வி சேகர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்