- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவதார் பட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடம் வீடியோவில் பேசிய இயக்குனர் ராஜமௌலி - அப்போது...

அவதார் பட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனிடம் வீடியோவில் பேசிய இயக்குனர் ராஜமௌலி – அப்போது முக்கிய கோரிக்கை வைத்த கேமரூன்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் இயக்குனர் ராஜமெளலி. எனினும் அவர் இயக்கிய பான் இந்தியா படங்களால் தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் மலையாளம் இந்தி கன்னடம் என பிறமொழி சினிமா ரசிகர்களின் கவனத்துக்குரிய சிறந்த படைப்பாளியாக மாறியிருக்கிறார். அதனால் இந்தியா முழுவதும் ஒரு நட்சத்திர இயக்குனராக ராஜமெளலி கொண்டாடப்படுகிறார்.

அவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி பாகுலி 2 ஆர்ஆர்ஆர் படங்களை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் பாராட்டும் அளவுக்கு பெரிய புகழை அவர் அடைந்திருக்கிறார். இப்போது நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வாரணாசி என்ற படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ராஜமௌலி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் அவதார் முதல் பாகம் வெளியானது. அவதார் 1 பாகம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது. இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.அதன்பின் 13 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற அவதார் 2ம் பாகம் வெளியானது.

இந்த படமும் அவதார் முதல் பாகத்தை போலவே ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் படைத்தது. இதையடுத்து அவதார் படத்தின் 3ம் பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஏஸ் படம் நாளை மறுதினம் 19ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தை காண உலகம் முழுவதும் ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அவதார் படங்களுக்கு இந்தியாவிலும் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. அதனால் நாளை மறுதினம் வெளியாக உள்ள அவதார் 3ம் பாகத்தை இந்தியாவில் பிரமோஷன் செய்யும் விதமாக இயக்குனர் ராஜமௌலிக்கு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஸ்பெஷலாக வீடியோ நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவதார் 3 படம் குறித்த பல புதிய விஷயங்களை அவர் ராஜமௌலியிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அப்போது குறிப்பாக இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படம் குறித்து பல தகவல்களை கேட்டறிந்த ஜேம்ஸ் கேமரூன், அந்த படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் கட்டாயம் வருகிறேன் என்று ராஜமௌலியிடம் ஜாலியாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்