நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கிய நிலையில் விரைவில் இந்த கட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் கலந்துக்கொண்ட ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் புக்கித் ஜலீல் ஆடிட்டோரியத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்து. இந்த விழாவில் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் ஷோபா சந்திரசேகர் மட்டுமே கலந்துக்கொண்டனர். சில பிரபல இயக்குனர்களும் பங்கேற்றனர்.
ஆனால் இந்த விழாவில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் மகள் திவ்யா ஷாஷா என 3 பேருமே கலந்துக்கொள்ளவில்லை. இது விஜய் சினிமா சார்ந்து பங்கேற்கும் கடைசி விழாவாக இருந்தும் இந்த நிகழ்ச்சியின் விஜயின் குடும்பத்தினர் வராதது இணையத்தில் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே சில ஆண்டுகளாக நடந்த விஜய் நடித்த படங்களின் விழாக்களில் மனைவி சங்கீதா விஜயுடன் கலந்துக்கொள்வதை தவிர்த்தார். மேலும் இப்போது சென்னை நீலாங்கரை வீட்டில் விஜய் மட்டுமே தனியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவரது மகன் ஜேசன் சஞ்சய் அண்ணா நகரில் ஒரு அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும் தகவல் உள்ளது.
இப்படி விஜய் தன்னுடைய பிரமாண்டமான வீட்டில் தனித்து வாழும் நிலையில் மனைவியும் மகளும் வெளிநாட்டிலும் மகன் ஜேசன் சஞ்சய் வேறு ஒரு இடத்தில் வசிப்பது அவர்களது குடும்பம் பிரிந்திருப்பதாக ஒரு தகவலை பரவச் செய்துள்ளது. அதே போல் ஜேசன் சஞ்சய் டைரக்டராக உள்ள நிலையில் தனது மகனின் படப்பிடிப்பு தளத்துக்கு ஒருமுறை கூட நேரில் விசிட் செய்து மகனை பாராட்ட முன்வரவில்லை.
அதாவது நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷா ஆகியோரை கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்துதான் வாழ்ந்து வருகிறார். அதை வெளியுலகத்துக்கு தெரிவிக்காத நிலையில் அவர்கள் ரகசியமாக வைத்திருந்தாலும் ஜனநாயகன் பட விழா, விஜயின் குடும்பத்தில் உள்ள விரிசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டது என்ற ஒரு விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.





