- Advertisement -
Homeபொழுதுபோக்குகேட்பதற்கு ஆள் இல்லை என்று இஷ்டத்துக்கு பேசுவீங்களா? தனது 2வது திருமணம் குறித்து நடிகை மீனா...

கேட்பதற்கு ஆள் இல்லை என்று இஷ்டத்துக்கு பேசுவீங்களா? தனது 2வது திருமணம் குறித்து நடிகை மீனா ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடிகை மீனா சிறுமியாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிகராகவே நடித்திருப்பார். இதில் ஒரு சிறப்பு காட்சியில் நடிகர் கே பாக்யராஜூம் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனா நடிப்பு கவனம் பெற்றத.

அதன்பிறகு இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் நடிகை மீனா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சோலையம்மா என்ற கேரக்டரில் மீனா வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

தயாரிப்பாளர் ராஜ்கிரண் ஹீரோ நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமும் இதுதான். நடிகர் வடிவேலுவுக்கும் இதுதான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்துடன் எஜமான் படத்தில் நடித்து நடிகை மீனா பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு அர்ஜூன் சரத்குமார் பார்த்திபன் முரளி என பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக மீனா மாறினார். குறிப்பாக கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகையாக நடிகை மீனா பல படங்களில் பிஸியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடிகை மீனா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் 48 வயதில் நுரையீரல் தொற்று காரணமாக இறந்தார். நடிகை மீனா தனது கணவரை இழந்தது திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. அதன்பிறகு தனது மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வரும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் அவர் நடிக்கிறார். மேலும் டிவி சேனல் நிகழ்ச்சிகளிலும், விளம்பர படங்களிலும் நடிகை மீனா அதிகமாக காணப்படுகிறார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் 2வது திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மீனா கூறியதாவது, என்னைப் பற்றிய இத்தகைய செய்திகள் மிகவும் காயப்படுத்துகிறது. நான் ஒரு பெண் என்பதாலும் தனியாக வாழ்கிறேன் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் எழுதலாம். கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைப்பது தவறு. இல்லாத விஷயங்களை உருவாக்கி பேசுவது வருத்தமாக உள்ளது. தற்போது இதுபோன்ற வதந்திகளை பார்த்தால் எனக்கு சில நேரங்களில் சிரிப்பு வருகிறது என்றும் மீனா கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்