- Advertisement -
Homeபொழுதுபோக்குதுபாயில் தொடரும் ஆக்ரோஷமான ஏவுகணை தாக்குதல்… தீப்பிழம்பாக மாறிய கட்டிடங்கள் - நடிகர்...

துபாயில் தொடரும் ஆக்ரோஷமான ஏவுகணை தாக்குதல்… தீப்பிழம்பாக மாறிய கட்டிடங்கள் – நடிகர் அஜீத்குமார் எப்படி இருக்கிறார்? மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட தகவல்!

- Advertisement -

இஸ்ரேல் – ஈரான் இடையே இப்போது கடும் போர் நடந்து வருகிறது. இது பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் தலைவர் மற்றும் மதகுரு அலி காமெனி அவரது குடும்பத்துடன் மொத்தமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இன்னும் மேலும் அச்சத்தை பதட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இதனை தொடர்ந்து ஈரான் ராணுவம் துபாயில் ஏவுகணை தாக்குதல் நடத்திய வரும் நிலையில் துபாயில் புகழ்பெற்ற கட்டிடங்கள் தாக்குதலால் சேதமடைந்து தீப்பிழம்பாக எரியும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. திடீர் திடீர் என வான்வழியாக பறந்து வரும் ஏவுகணைகள் அங்குள்ள மிக உயர்ந்த கட்டிடங்களை தாக்கி தீப்பிழம்பாக பற்றி எரிகிறது.

- Advertisement -

அந்த காட்சிகளை நேரில் பார்க்கும் மக்கள் அலறியடித்து கொண்டு ரோடுகளில் ஓடி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்து இந்திய மக்களும் பதைபதைத்து போகின்றனர். ஏனெனில் துபாயில் ஏராளமான இந்தியர்கள் இருந்து வருகின்றனர். துபாயில் வான்வழியாக கடும் தாக்குதல் நடந்து வரும் நிலையில் அங்குள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏவுகணை தாக்குதல் காரணமாக துபாயில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள மகக்ள் தங்களை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். விளையாட்டு வீராங்கணை வி பி சிந்து துபாயில் இருப்பதாகவும் விமான சேவை ரத்தால் இந்தியாவுக்கு அவரால் திரும்ப முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது

- Advertisement -

இதற்கிடையே துபாயில் கார் ரேஸில் கலந்துக்கொள்ள நடிகர் அஜீத்குமார் சமீபத்தில் அங்கு சென்றார். அங்கு அவருக்கு சொந்தமான பங்களாவும் உள்ளது. இப்படிப்பட்ட போர் பதட்ட சூழலில் நடிகர் அஜீத்குமார் எப்படி இருக்கிறார் என்ற கவலையும் பதட்டமும் அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. பலரும் இதுகுறித்து புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் இன்று துபாயில் இருந்து சென்னைக்கு திரும்புவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் துபாயில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவருடைய பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது அஜீத்குமார் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். இந்த பதட்டமான சூழல் முடிவடைந்ததும் அஜீத்குமார் சென்னை திரும்புவார் என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்