- Advertisement -
Homeபொழுதுபோக்குகாலம் காத்திருந்து பதில் சொல்லும் - தன்னை விமர்சித்த தவெக கட்சி நிர்வாகிக்கு நடிகர் ரஜினிகாந்த்...

காலம் காத்திருந்து பதில் சொல்லும் – தன்னை விமர்சித்த தவெக கட்சி நிர்வாகிக்கு நடிகர் ரஜினிகாந்த் தந்த பதிலடி!

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் மாநில முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆசைப்பட்டார். ஆனால் அவர் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து அரசியலை கைவிட்டு விட்டார். ஆனால் இப்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் படங்களில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் அப்படியல்ல. எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் மன வலிமையோடு செயல்படுகிறார் என்று ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

- Advertisement -

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கருத்துக்கு பலத்த கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரஜினியை விமர்சித்த தவெக கட்சிக்கு வருகிற சட்டசபை தேர்தலில் சரியான பதிலடி கொடுப்போம். விஜயின் தவெக கட்சி கணக்கை வருகிற தேர்தலில் முடித்து காட்டுவோம் என்றும் கோபமாக பதிவுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியை பற்றிய இந்த விமர்சனத்துக்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட பலரும் ஆதவ் அர்ஜூனாவுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தலைமை பொறுப்பில் இருக்கும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் என்னைப்பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். அவருடைய அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய அமைச்சர் எல் முருகன் தமிழக அமைச்சர் ரகுபதி திருமாவளவன் எஸ்பி வேலுமணி அண்ணாமலை அர்ஜூன் மூர்த்தி அன்புமணி ராமதாஸ் ஜி கே வாசன் ஆகியோருக்கு நன்றி.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் அமீர் தனஞ்செயன் மற்றும் திரையுலக நண்பர்கள் மற்றும் நக்கீரன் கோபால் ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர் என வாழவைக்கும் தெய்வங்கள் ஆன ரசிக பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்