தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் அருந்ததி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சுந்தர் சி இயக்கத்தில் தமிழில் ரெண்டு என்ற படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார்.
ஆனால் அப்போது அனுஷ்கா பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை. ஆனால் அருந்ததி படத்தில் நடித்த பிறகு அனுஷ்காவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. தொடர்ந்து தமிழில் அவர் பல படங்களில் நடித்தார்.
குறிப்பாக ரஜினியுடன் லிங்கா விஜயுடன் வேட்டைக்காரன் சூர்யாவுடன் சிங்கம் சிங்கம் 2 மற்றும் ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் இஞ்சி இடுப்பழகி விக்ரமுடன் தெய்வ திருமகள் என பல படங்களில் அனுஷ்கா நடித்தார். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி பாகுபலி 2 ஆகிய படங்களில் தேவசேனை கேரக்டரில் நடித்த அனுஷ்காவுக்கு மிகப்பெரிய பாராட்டு ரசிகர்களிடம் கிடைத்தது.
இந்நிலையில் பாகுபலி 2 படத்துக்கு பிறகு அனுஷ்கா உடல் பருமன் காரணமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். பாகுபலி 2 படத்தில் நடித்த போது நடிகர் பிரபாஸூம் அனுஷ்காவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதை இருவருமே மறுத்துவிட்டனர். அதன்பிறகு இப்போது வரை நடிகர் பிரபாஸூம் திருமணம் செய்து கொள்ளவில்லை. அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 44 வயதாகும் நிலையில் நடிகை அனுஷ்கா ஒரு தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு சினிமாஸ் வட்டாரத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து நடிகை அனுஷ்கா கூறியிருப்பதாவது, எனது திருமணம் குறித்த வதந்திகளை வெளியிடும் ஒவ்வொரு நேரமும் என்னுடைய வயது 44 என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் இதே வயதில் எத்தனையோ ஹீரோக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த போதும் அவர்களின் வயதை யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் நடிகைகள் விஷயத்தில் மட்டும் இப்படி வயதை சொல்லிக்காட்டி அதை பெரிதுபடுத்துகிறார்கள். அந்த வகையில் ஊடகங்கள் நடிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையை நடிகைகளுக்கு கொடுப்பதில்லை என்று தனது கோபத்தை நடிகை அனுஷ்கா அதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.





