- Advertisement -
Homeபொழுதுபோக்கு25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தந்த விஜய் பட நடிகை -...

25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தந்த விஜய் பட நடிகை – இத்தனை ஆண்டுகளாக அவர் நடிக்காதது ஏன்? – அவரே தந்த விளக்கம்!

- Advertisement -

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சங்கீதா. பிறகு சில படங்களில் சிறுமியாகவும் தங்கை மகள் பள்ளி மாணவி போன்ற கேரக்டர்களில் சங்கீதா நடித்திருந்தார். அதன்பிறகு அவர் பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அந்த வகையில் ராஜ்கிரணுடன் எல்லாமே என் ராசாதான் மற்றும் பொங்கலோ பொங்கல் காலம் மாறிப்போச்சு சீதனம் அம்மன் கோவில் வாசலிலே போன்ற பல படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார். குறிப்பாக 1996ம் ஆண்டில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜயுடன் பூவே உனக்காக படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த படத்தில் நடித்த போது ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை அவர் திருமணம் செய்துக்கொண்டார். பிறகு நடிப்பை விட்டு சங்கீதா விலகிய நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தமிழ் சினிமாவில் சங்கீதா ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். காளிதாஸ் 2 என்ற படத்தில் சங்கீதா நடித்திருக்கிறார்.

காளிதாஸ் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சங்கீதா பேசியதாவது, எனக்கு பிடித்த ஜானரில் இந்த படத்தின் கதை நடக்கிறது. என்னை நம்பி இந்த கேரக்டரை கொடுத்த இயக்குனருக்கு மிகவும் நன்றி. 25 ஆண்டுகளுக்குப் பிறகு நான் தமிழில் இப்போது நடிக்கிறேன் என்பது எனக்கே புதிதாக இருக்கிறது.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருந்து விட்டேன். இரவில் சரியான நேரத்தில் தூங்கி விடுவேன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில் தான் நடந்தது. ஆனாலும் படக்குழுவை பார்த்தால் எனக்கு உற்சாகம் வந்துவிடும். இந்த படத்தின் ஹீரோ பரத். படப்பிடிப்பு எப்படி இருக்குமோ என்று பயந்தேன். ஆனால் முதல் நாளிலிருந்து பரத் எனக்கு பிடித்த நடிகராகி விட்டார்.

எனக்கு பிடித்த பாடல்களை செட்டில் ஒலிபரப்பினார். கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் பரத் புறப்பட்டார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சினிமாவில் தான் இருக்கிறேன். எங்கேயும் போகவில்லை. என் கணவரும் சினிமாவில் தான் இருக்கிறார் என்று சங்கீதா கூறினார். மேலும் இந்த விழாவில் அவர் சொல்லாமலே யார் பார்த்தது என்ற பாடலை சில டெப்ஸ் போட்டு நடனம் ஆடினார். படத்திலும் இந்த பாடலுக்கு அவர் நடனம் ஆடியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்